முக்கியப் பிரிவுகளில் தேசிய விருது – ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் சிறப்பு என்ன?

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்தியுள்ளதை கவனிக்க முடிகிறது. குறிப்பாக, ‘சூரைரப்போற்று’, ‘மண்டேலா’ படங்களுடன் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ கவனம் ஈர்த்துள்ளது.