மேலும் அகதிகளை ஏற்கவுள்ள பைடன்

வருடாந்தம் அகதிகளாக ஏற்போரை எதிர்வரும் நிதியாண்டில் 125,000ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த அகதிகள் உள்ளெடுப்பானது எட்டு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பொன்றாகும். இவ்வாண்டில் ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் 15,000 பேரே, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதலான நிதியாண்டில் உள்ளெடுக்கப்படவுள்ளனர்.