மேலும் இரண்டு பெண்பிள்ளைகள் முறையீடு – தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டார்

தனது பூப்புனித நீராட்டு விழாவிற்கான தனிப்பட்ட படப்பிடிப்பில் தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக யுவதி ஒருவர் கொடுத்த குற்றச்சாட்டில் நவம்பர் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்டவர் மீண்டும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய கைது மேலும் இரண்டு யுவதிகள் தாங்கள் இவ்வாறு பாலியல் தொந்தரவிற்கும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்பட்டதாக பொலிசாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து மேற்படி நபர் மீது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் மேலதிகமாகச் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நபர் 2000 தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இவ்வாறான செயல்களைச் செய்தார் என்று நம்பப்படுவதாகவும், ஸ்காபரோவில் இவரது புகைப்பட நிறுவனம் இருந்ததாகவும், அதன்போதே இவர் பதின்ம வயதுப் பெண்களிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது.

தமிழர் சமூகத்தில் இருந்து இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்ததும் அதன் தொடர்ச்சியாக இரண்டு பெண்கள் புகார்களைப் பதிவு செய்ததும் தமிழர் சமுதாயத்தில் பெண்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைக் காட்டுவதாக அமைந்துள்ளது