யாழ்ப்பாணத்தில் மகளிர் அரசியல் செயல் அணி உதயம்!.

மகளிர் அரசியல் செயல் அணி என்ற Women’s political platform for action கடந்த 29ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவ் அணியின்; அவசர தேவை ஒன்றிற்கான சனநாயக வெளி எமக்கு சாதகமாக அமைந்துள்ளது என இதன் இணைத்தலைவிகளில் ஒருவரான சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் பெரும் ஆரவாரத்துடன் சில அரசியல் கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய கட்சி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை இணைத்தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மகளிர் அரசியல் அணி ஒன்றும் உதயமாகி உள்ளது.

புதியதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியிலும் சரி, ஏற்கனவே இருக்கும் தமிழ் கட்சிகளிலும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மகளிர் அரசியல் அணி உதயமாகி உள்ளது. பெண்களுக்கான அரசியல் உரிமைகள், அரசியல் சமூக உரிமை மேம்பாட்டிற்காக உழைக்கும் உரிமை, உள்ளுராட்சி, பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. பெண்கள் உள்ளூட்சி மற்றும் பாராளுமன்ற நியமனங்களுக்காக அரசியல் கட்சிகளோடு இணைந்து செயற்பட்ட போதும் நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டன. பெண்களுக்காக 30மூ ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றகோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், அண்மைக் காலமாக கவனத்தில் எடுக்கப்படவில்லை.

மேலை நாடுகளோடு எமது நாட்டின் அரசியல் பங்களிப்பை ஒப்பிடும் போது நாம் பல தூரம் புறந்தள்ளப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக உள்ளது. எங்கள் நாட்டு பெண்கள் குடியேற்ற வாசிகளாக மேற்குலகு சென்ற போதிலும் அரசியலில் முக்கிய பதவிகளை வகிப்பது பெருமையளிக்கும் அதேநேரம் எமதுநாட்டில் பெண்களை அரசியல் கட்சிகள் உள்வாங்காமை கவலை அளிப்பதாக உள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பல நிறுவனங்கள், அமைப்புகள் ஊக்குவிப்பு செயற்பாடுகளை நடாத்தி வந்திருந்த போதிலும், பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 5மூ இற்கு மேற்பட்டதாக தரவுகள் காட்டவில்லை. ஆகவே இதற்கான காரணங்களை ஆராய்ந்து, பெண்கள் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான ஓர் அமைப்பு தேவை என்ற ரீதியில் மகளிர் அரசியல் செயல் அணி உதயமாகின்றது.

பிரதானசெயற்பாடுகளாக:

1. பெண்களின் துரிதமானஅரசியல் பிரவேசம் 2. அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்கள் 3. பெண்களை அரசியல் ஈடுபாட்டில் இணைய வைத்தல்
4. பெண்களுக்கான அரசியல் கல்வி ஃ விழிப்புணர்வு 5. தேர்தலில் வாக்களிக்கும் முறைமைகள்ஃஅரசியலில் தலைமை தாங்குவதற்கு உகந்த தலைமைப் பயிற்சிகள்.
6. அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு சாதகமாக பரப்புரைகள். 7. உயர் பதவிகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துதல்.

உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் விரைவாக இடம் பெற உள்ளதால், இவ் அணியின்; செயற்பாட்டின் வீச்சுமிக இன்றியமையாததாக உள்ளது. இவ்வமைப்பில் இது வரை வடமாகாணத்திலிருந்து 63 செயலணியினர் இணைந்துள்ளனர். இவ்வமைப்பின் முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு 29 டிசம்பர் 2015 யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் தலைமைக்கு பொறுப்பாக ஓர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பணிகள், அங்கீகாரம், தொடர் நடவடிக்கைகள், எதிர்வரும் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இணைத்தலைமை: 1. சரோஜா சிவச்சந்திரன் 2. விமலேஸ்வரி சிறிகாந்தரூபன் 3. இராகினி இராமலிங்கம்

செயலாளர்: தாமரைச்செல்வி அலோசியஸ்