யாழ்ப்பாண பொலீசாரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது

கோவில் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றேன் .23.01.2018 அன்று இரவு 11.15 வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு வரும்வேளை கச்சேரியடியில் உள்ள கடைக்குச் சென்று ஆஸ்பத்திரி வீதிவழியாக எனது வீடடைச் சென்றடைந்தேன், அப்போது எனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் மறைவாக யாழ் போக்குவரத்து போலீசார் நின்றிருந்தனர் அவர்களில் சுமித் என்ற பொலீஸ் அதிகாரி வீட்டு வாசலில் நின்ற எனதருகில் வந்து எனது மோட்டார் சைக்கிள் காப்புறுதி பத்திரம் மற்றும் இறை வரி பத்திரம், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களைக் காண்பிக்குமாறு கோரினார், நான் அவரிடம் அதற்கு மறுத்துவிடடேன். வீதியில் செல்லும்போது மாத்திரமே போலீசாருக்கு ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் நான் எனது வீட்டு வாசலில் நின்றிருந்த போது நீங்கள் ஆவணங்களைக் கோருவது சட்டவிரோதமானது ஆகும் என்று கூறி நான் எனது வீட்டுக்குள் சென்று விட்டேன்.

அதன் பின் எனது வீட்டு வாசலில் நின்ற லுயஅயாய குயணநச 150 வகை மோட்டார் சைக்கிளை வாசலில் இருந்து தாங்கள் நின்ற இடத்திற்கு ஒரு பொலீஸ் உத்தியோகஸ்தர் உருட்டிச் சென்று வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு எனது வீட்டுக்குள் நுளைந்து வீட்டுக்குள் இருந்த என்னைக் கடுமையாக தாக்கி கைவிலங்கு இட்டு வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்திற்கு அவர்களின் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டேன்.
அங்கு என்மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டது எனக்கு மதுபான பரிசோதனை செய்யும் பலூன் கொடுக்கப்பட்டது அதில் நான் ஊதிய வேளை எவ்வித மாற்றமும் வராத படியினால் வேறு ஒரு போலீசார் வரவழைக்கப்பட்டு அவர் அதை ஊதி தமது சட்ட தேவையை பூர்த்தி செய்தனர் பின்னர் என்னிடம் அதை நான் ஊதியதற்கு அடையாளமாக கைரேகை பதியுமாறு என்னை வற்புறுத்தினர் , நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன் அப்போது பிரசாந்தன் எனும் போலீஸ் அதிகாரி நீ பெரிய படிச்சவனாக இருக்கலாம் இங்கே நாங்கள் சொல்லுறது தான் சட்டம் என்று கூறிய படியே தனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை எனது முகத்தை நோக்கி காட்டி இப்போது உன்னை சுட்டுவிட்டு நீ என்னை தாக்க வந்ததால் நான் தற்பாதுகாப்பிற்காக சுட்டேன் என்று வழக்கை முடித்து விடுவேன் என என்னை அச்சுறுத்தினார்.
நான்; உயிர் பயத்தில் அவர்கள் சொன்னபடி செய்யச் சம்மதித்தேன். அவ் வேளையில் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் பதற ஆரம்பித்தது அப்போது ஏதோ எழுதிக்கொண்டிருந்த சுமித் என்பவரிடம் எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்னை வைத்தியசாலை கூட்டி செல்லுங்கள் என கேட்ட போது எது என்றாலும் காலையில் தான் செய்யமுடியும் நீ செத்தால் சா என்று கூறி என்னை ஒரு தனி கம்பி கூண்டில் அடைத்து விட்டார். அதன் பின் 24ம் திகதி மதியம் 12 .30 மணிக்கு போலீஸ் பிணையில் விடுதலை செய்து 26ம் திகதி உனக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு அங்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.
நான் எனது வீட்டில் இருந்த வேளை சட்டவிரோதமாக போக்குவரத்து பொலீசார் உள்நுளைந்து என்னைத் தாக்கி பலவந்தமாக கைவிலங்கிட்டு பொலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்று எனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து என்மேல் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளமையானது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கடந்த முப்பது நாட்களாக எனக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர் பார்த்து இருந்தேன் ஆனால் அப்படி நடப்பதாக இல்லை. எனவே என் முகநூல் நண்பர்களிடம் உதவி கோருகிறேன். இவ்வாறான சட்ட முறையற்ற கைதுகள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க வேண்டும் . இதில் வேடிக்கை என்னவென்றால் இவ் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள குறித்த தமிழ் போலீஸ் அதிகாரி கடைசி வரைக்கும் தமிழில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவ்வாறான தமிழன் உண்மையில் ஒரு தமிழனா இல்லை தெற்கு விருந்தாளிக்கு —————- ? எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

(Jeeva Sambasivam)