யாழ். பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி, விடுதிகளிலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழுவாக வீதியால் செல்பவர்களை மறித்து விசாரணை செய்யும் பொலிஸார், ஆள் அடையாளத்தையும், உரிய காரணங்களையும் நிரூபிக்கத் தவறுபவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து உறுதிப்படுத்திய பின்னர் விடுவிக்கின்றனர்.