யாழ். பல்கலை மாணவர் கொலை: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவரையும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்.நீதவான் நீதிமன்றம், இன்று (16) உத்தரவிட்டது. உயிரிழந்த இரு மாணவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவரும், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த படுகொலைச் சம்பவம், யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.