ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்

  • குழப்பத்தை தவிர்க்க ரஷ்ய-அமெரிக்க இராணுவம் அவசர சந்திப்பு

சிரியாவில் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா மற்றும் ரஷ்ய இராணுவங்கள் அவசர பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விருப்பதாக இரு நாடுகளினதும் இராஜதந் திரிகள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப்படும் குழு மீது கடந்த புதனன்று சுமார் 20 ஏவுகணை தாக்குதல்களை நடத்தி யதாக ரஷ்ய பாதுகாப்பு அதிகரிகள் அறிவித்தனர். எனினும் ரஷ்யாவின் இலக்குகள் ஐ.எஸ்ஸை தவிர்த்து சிரிய ஜனாதிபதி அஸாத்தின் எதிர்த்தரப்பினராக இருக்கக் கூடும் என்று அமெரிக்கா அச்சம் வெளி யிட்டுள்ளது. அமெரிக்காவும் ஐ.எஸ். மீது ஈராக் மற்றும் சிரியாவில் வான் தாக்குதல் களை நடத்தி வருகிறது.

ஐ.எஸ்ஸ{க்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை க்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்று நேட்டோ குறிப்பிட்டுள்ளது. இதில் புதனன்று ரஷ்யா வான் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னேரே அது பற்றி அறிவுறுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், ரஷ்ய போர் விமானங்கள் சி.ஐ.ஏவின் பயிற்சி பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பாராத சம்பவங்களை தவிர்ப்பதற்கு தொடர்பாடல் வலையமைப்பொன்று உரு வாக்கப்பட வேண்டும் என்று ரஷ்ய வெளி யுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவ் குறிப் பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்த பேச்சு வார்த்தை முடியுமான விரைவில் நடத்தப் படும் என்று அமெரிக்க இராஜhங்கச் செய லாளர் ஜோன் கெர்ரி தெரிவித்தார்.

ஒரே நோக்கம் ஐ.எஸ்ஸை இலக்கு வைப்பதாக இருக்கவேண்டும். ஆனால் நிச்ச யமாக நடப்பது அதுவாக இல்லை” என்றும் கெர்ரி சுட்டிக்காட்டினார். பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜPன் யவெஸ் லே டிரியான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குறிப்பிடும் போது, “உண்மையில், அவர்கள் இஸ்லாமிய தேசம் குழுவின் மீது தாக்குதல் நடத்த வில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவின் செயல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு ஒப்பனதாகும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அஷ்டன் காட்டர் எச்சரித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் அசாத் அரசை கவிழ்க்க பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களும் போராடி வருகின்றன. இதில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அஸாத் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. மறுபுறம் ரஷ்யா அசாத் அரசு அதிகாரத்தில் நீடிக்க ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை முதல் முறை சிரியாவில் வான் தாக்குதல் நடத்திய ரஷ்யா, ஐ.எஸ். குழு வையே இலக்கு வைத்ததாக அந்நாட்டு பாது காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ்ஸின் தகவல்தொடர்பு வசதிகள், ஆயுதக் கிடங் குகள், வெடிபொருள் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் இலக்கு வைக்கப்பட்டதா கவும் அருகில் இருக்கும் சிவில் கட்டுமா னங்கள் தாக்கப்படவில்லை என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. எனினும் ரஷ்ய போர் விமானங்கள் சபரானேஹ், ரஸ்தான் மற்றும் தல்பிசெஹ் உட்பட பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 36 சிவிலியன்கள் கொல்லப் பட்டதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்றும் சிரிய எதிர்த்தரப்பு செயற்பாட் டாளர்கள் குறிப்பிட்டுள் ளனர். அதேபோன்று ரஷ்யா தாக்கிய இடங்கள் ஐ. எஸ்ஸின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் என்று செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யா தாக்கிய பகுதி தொடர்ந்து கிளர்ச்சியா ளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம் என்று தல்பிசெஹ் நகர வாசிகள் குறிப்பிட்டுள் ளனர்.”பொதுவாக அசா த்துக்கு எதிரான கிளர்ச் சியாளர்களை துரத்து வதே ரஷ்யாவின் நோக் கம்” என்று குடியிருப் பாளர் ஒருவர் பி.பி. சிக்கு குறிப்பிட்டிருந் தார்.

ரஸ்தானில் இருக்கும் மருத்துவர் ஒருவர் ராய் ட்டருக்கு குறிப்பிடும் போது, “நாம் கடந்த ஐந்த ஆண்டு களில் பல்வேறு வகையான ஆயுதங்களையும் கண்டிருகிறோம். ஆனால் இன்று நடந்தது உண்மையில் அதிக மூர்க் கமான மற்றும் விரிவானதுமான வன்முறை யாக அமைந்தது” என்று ரஷ்ய தாக்குதல் பற்றி புதனன்று விபரித்திருந் தார்.

சிரியாவில் இருக்கும் ஆயுததாரிகள் ரஷ்யா உட்பட தமது நாடுகளுக்கு திரும் பும் அச்சுறுத்தலுக்கும் எதிராக ரஷ்யா செயற்படுகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடி குறிப்பிட்டிருந்தார்.

சிரியாவின் அசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரதான நாடான சவூதி அரேபியா, சிரியா மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து தீவிர அவதானத்துடன் இருப்பதாக எச்சரித் துள்ளது.

இந்த தாக்குதல்களை ரஷ்யா உடன் நிறுத்த வேண்டும் என்று ஐ.நாவுக் கான சவூதி தூதுவர் அப்துல்லாஹ் அல் முவல்லிமி வலியுறுத்தியுள்ளார். சிரிய அரச தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நிலையில் அது ஐ.எஸ்ஸ{க்கு எதிராக ஒரே நேரத்தில் செயற்பட முயற்சிக்கக் கூடாது என்று அவர் ரஷ்யாவை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரஷ்ய போர் விமானங்கள் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் சிரியாவில் குண்டு போட்டுள்ளன.

ஆக்கிர மிப்பு படை என்று அழைக்கப்படும் கிளர்ச்சிக் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு நிலைகள் மீதே ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக லெபனான் தொலைக் காட்சி ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது.

இதில் மூலோபாய ரீதியில் முக்கியம் வாய்ந்த ஜஸிர் அல் குர் நகர் மற்றும் இத்லிப் மாகாணம், ஹமா மாகாணம் உட்பட தூர தென்பகுதிகள் மீது ரஷ்யா வான் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆக்கிரமிப்பு படை ஜெயிஷ் அல் பதா) கிளர்ச்சியாளர்கள் அண்மைய மாதங்களில் நாட்டின் தென் மேற்கு பகுதியில் முன்னேற் றம் கண்டு வருகின்றனர். இவர்கள் அரச ஆதரவுபடையிடம் இருந்து இத்லிப் நகரை யும் கைப்பற்றினர். இந்த கூட்டணியில் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி, கடும்போக்கு இஸ்லாமிய குழுவான அஹ்ரார் அல்ம் போன்ற கிளர்ச்சியாளர்களுடன் மிதவாத இஸ்லாமிய கிளர்ச்சி யாளர்களும் அடங்குகின்றனர். எனினும் இந்த அனைத்து தரப்புகளும் ஐ.எஸ் க்கு எதிராகவும் போராடி வருகின் றமை குறிப்பிடத்தக்கது.