லெபனானில் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் பாடசாலைகள்

பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையின்போது அவர்கள் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.