“வடக்கும் கிழக்கும் மாறும்’

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இன்று (08), யாழ்ப்பாணடம் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழில் நல்லூர், வலிகாமம், காரைநகர், உள்ளிட்ட 15 பிரதேச செயலகங்களிலும் விசேடமாக ஒவ்வொரு தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று கூறிய அவர், அதேபோன்று, தொழில்நுட்ப மய்யம், தொழில்நுட்பப் பூங்கா என்பன அவற்றுடன் இணைத்து உருவாக்கப்படும் கூறினார்.

இதனூடாக இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வர் என்றும் சிறு கைத்தொழில் புரிகின்றவர்கள், பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கு அனைத்து உதவித் திட்டங்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.