வடக்கு, கிழக்கு மக்களுக்கான மாகாணசபை

(Charles Ariyakumar Jaseeharan)
வடக்கு, கிழக்கு மக்களுக்கான

மாகாணசபை முறைமையை
ஒழித்துவிட்டது கூட்டமைப்பு!!

  • இதற்குச் சுமந்திரனே பொறுப்பு என்கிறார் மஹிந்த

“வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாதொழித்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது கிழக்கு மாகாண சபையும் இல்லை. வடக்கு மாகாண சபையும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அநியாயத்தை செய்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்ததென்பதனை இவர்களால் கூற முடியுமா?”