வடமாகாணத்தில் புதிய அமைச்சர்கள் நியமனம்

வடமாகாணத்தின் புதிய அமைச்சர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று( 23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். நிதி மற்றும் திட்டமிடல்,சட்டம் மற்றும் ஒழுங்கு காணி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் புனரமைப்பு, சுற்றுலா, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம், வீதி அபிவிருத்தி, ​மோட்டார் போக்குவரத்து அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூகசேவைகள்,கூட்டுறவு, வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக அனந்தி சசிதரனும், வடமாகாண சுகாதார சுகாதார அமைச்சராக குணசீலனும், வடமாகாண விவசாய மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சராக கந்தையா சிவநேசனும் தமது அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.