வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் அரசாங்க மட்டத்தில் நிச்சயம் சாதகமான தீர்மானம் பெற்றுத்தரப்படுமென்பதால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “போலியான வாக்குறுதிகளை வழங்கி சிறைக் கைதிகளை ஏமாற்ற நான் விரும்பவில்லை. இவ்வருடம் முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்களேயுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து கைதிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார்செய்ய எனக்கு இக்காலப் பகுதியை அவகாசமாக தாருங்கள்” எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக் கைதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றிய பத்திரத்தை முன்வைப்பதன் மூலம் பிரதமர், நீதியமைச்சு, சிறைச்சாலைகள் அமைச்சு, ஜனாதிபதி தலைமையில் மேற்படி சிறைக் கைதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இறுதி தீர்மானம் எடுக்க்பபடும்” எனவும் சிறைக் கைதிகளிடம் வாக்குறுதியளித்ததாக அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ம் நாடு முழுவது முள்ள சிறைச்சாலைகளில் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

வெலிக்கடை நியு மகஸின் சிறைச்சாலையில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள சிறைக் கைதிகளை சந்திப்பதற்காக அமைசச்ர் விஜயதாச ராஜபக்ஷ அங்கு நேரில் சமூகமளித்திருந்தார்.

அவருடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டி ருந்தனர்.

சிறைக் கைதிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே, அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளையும் கோரிக்கையினையும் மேற்படி விளக்கினார்.

இவர்கள் யுத்த காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.

சுமார் 150 சிறைக் கைதிகள் இந்த உண்ணாவிரதப் போராடடத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. எமது §ச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒருசிலர் தமது போராட்டத்தை கைவிட விரும்பியுள்ள போதும் ஒட்டுமொத்த தீர்மானத்தினை எமக்கு அறியத்தர வில்லையெனவும் அசைம்சர் ராஜபக்ஷ கூறினார்.

கேள்வி : சிறைக்கைதிகளின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதா?

பதில் : ஆறு பேர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். இவர்களில் இருவர் அநுராதபுர சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள். இவரினதும் நிலை கவலைக்கிடமானதாக இல்லை. அனைவரும் சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே உள்ளனர்.

கேள்வி : ஜெனீவா பரிந்துரைக்கமைய பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படுமா?

பதில் : அது இன்னும் பேச்சு மட்டத் திலேயே உள்ளது. சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ள சட்ட வரைபுக்கள் அதனை உள்வாங்கப் பார்க்கின்றோம்.

கேள்வி : சிறைக்கைதிகள் விவகாரம் உண்மையில் எந்த அமைச்சின் கீழ் வருகிறது.

பதில் : தீர்மானங்களை வழங்குவது நீதியமைச்சின் பொறுப்பிலும் சிறைக் கதிகளின் நடவடிக்கைகள் சிறைச்சாலை அமைச்சின் பொறுப்பிலுமுள்ளது.

கேள்வி : குறித்த சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டதுதானே.

பதில் : ஆம். அது அநுராதபுரத்தில் உள்ளது. அதன் செயற்பாடுகள் துரிதகதியில் இல்லை. எதிர்காலத்தில் தேவையேற்படின் அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்து வதற்கான ஒத்துழைப்புகளை நாம் வழங்குவோம்.

கேள்வி : அப்படியானால் இந்த சிறைக் கைதிகள் விடுதலை செய்ய்பபடுவது நிச்சயமா?

பதில் : 1 – (… சிரிக்கிறார்) அப்படி விடுதலை செய்வதாக இருந்தால்தான் அமைச்சிலிருந்தபடியே நான் இவர்களை விடுதலை செய்திருப்பேனே.

நாங்கள் இன்று இங்கு வந்திருக்க §வ்ணடிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அரச மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் வரை அது குறித்து என்னால் எதுவும் உறுதியாக தெரிவிக்க முடியாது. தீர்மானம் மேற்கொண்ட பிறகு முடிவை அறிவிப் போம். எதுவானாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்மானத்தை பெற்றுத் தருவோம்.

கேள்வி : இதற்காக அமைச்சரவையினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதா?

பதில் : இல்லை. அமைச்சரவையில் இது குறித்து உரையாடல் மட்டுமே இடம்பெற்றது.