வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.