வவுனியாவில் சம்மந்தன் ‘துாக்கிலடப்பட்டார்’

வவுனியாவில் செருப்பு மாலை அணிவித்து சம்மந்தன் துாக்கிலடப்பட்டார் . தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படும் இரா.சம்பந்தன், வவுனியாவுக்கு இன்று (16.07.2016) வருகை தந்திருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘செருப்பு மாலை’ அணிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற – மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சம்பந்தன் இன்று சந்தித்திருந்தார்.
இந்தநிலையில் ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதிக்கு முன்பாக மின்சார கம்பத்தில் சம்பந்தனின் உருவம் அச்சிடப்பட்ட பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ‘தாண்டிக்குளத்துக்கு வாக்கெடுப்பு நடத்தும் உனக்கு, சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? என்று தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த தலைமைத்துவ தகுதி உண்டா? என்று கேள்வியெழுப்பி பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட ‘யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்’ தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்த மாட்டோம் என்று சம்பந்தன், ரிவிர சிங்கள ஊடகத்துக்கு கருத்து கூறிய பின்னர் அவர் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த எதிர்ப்பு மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.