வித்தியா கொலையாளி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே குறித்த இருவருக்கும் இன்று (30) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.