வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள, மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுமார் 150 கைதிகள், நேற்று (15) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார். போகம்பர சிறைச்சாலையிலுள்ள 50 கைதிகள், கடந்த வியாழக்கிழமை (14) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆரம்பித்த பின்னரே, இந்த​ வெலிக்கடையிலும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுத​லை செய்யுமாறு ​கோரியே, இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.