வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு நிறுத்தம்….பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, முதலீட்டு ஊடக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.