ஹட்டனில் ஆசிரியைக்கும் மாணவர்களுக்கும் கொரோனா

ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலும் 4 மாணவர்களுக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் மாணவருக்கு தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஐவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.