ஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்

நாட்டில் வேகமாகத் தொற்று பரவி வரும் நிலையில், சுகாதார தரப்பினர் உள்ளிட்ட பலர், நாட்டை முழுமையாக முடக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அரசாங்கம் இதுவரை பொது முடக்கத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையிலேயே, நாட்டில் 20இற்கும் மேற்பட்ட நகரங்களின் வர்த்தக நிலையங்களை ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு மூட அந்தந்த நகரங்களின் வர்த்தக சங்கங்கள் தீர்மானித்து, நகரங்களை முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.