1000/- நாள் சம்பளத்தையும் 25 நாட்கள் வேலையையும் உறுதிப்படுத்து!”

மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு காணாத தன்னெழுச்சிப் போராட்டத்தை அனைத்து ஜனநாயக, மனிதாபிமான சக்திகளும் முழுமையாக ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இளைஞர்கள், பெண்கள், முதியோர் அனைவரும் களம் இறங்கியுள்ளனர். கட்சிகள், தொழிற்சங்கங்கள் தலைமைகொடுப்பதற்கு முன்னரே தன்னேழுச்சியாக திரண்டுள்ள மக்களின் உணர்வுகளையும், தயார் நிலையையும் உரிய வகையில் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது. இந்த தன்னம்பிக்கையும், ஓர்மமும், பிரக்ஞையும் சோராத வகையில் தக்கவைப்பதன் மூலம் மட்டுமே இனி வரும் எந்த நீதியான கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும். எனவே எம் மக்களின் போராட்டம் வீண்போகாத வகையில் அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறோம் தோழர்களே.