2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.