6 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்து 7 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து சூரத் பகுதியில் 6 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், 15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.