71 ஆண்டுகளுக்கு பின்னர் எட்டிப் பார்த்த மழை

கிரீன்லாந்திலுள்ள  பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர்  முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், கடந்த 14 முதல் 16ஆம்  திகதி வரை மொத்தம் 7 பில்லியன் தொன் மழை கிரீன்லாந்து முழுவதும் பெய்துள்ளதாகக்  கூறப்படுகிறது. மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக  தீவு முழுவதும் பரவலான பனி உருகல் ஏற்பட்டுள்ளதாக மூத்த விஞ்ஞானி வோல்ட் மேயர் கூறியுள்ளார். அதே வேளை பனிக்கட்டிகள் உருகிவரும் வீதம் அதிகரித்து  வருவது மிகவும் கவலை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.