அபிவிருத்திவாக்குறுதிகளைஅளித்த ராஜபக்சக்கள் அவற்றைசாதனைகளாக்குவதுபெருஞ் சோதனையே!

புலிகளுக்குஎதிரானயுத்தத்தில் வெற்றிக்கு மூல காரணமாக இருந்தவர் கோத்தபாய ராஜபக்ச வேஎனவும் அந்தவகையில் நாட்டினதும் சாதாரணமக்களினதும் பாதுகாப்புக்குஅவரேசிறந்தவர் என்றபலமானஎண்ணமும்,மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தகாலத்திலேயேநாடுசமூகபொருளாதாரஉட்கட்டுமானஅபிவிருத்தியில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டதுஎன்பதனால் ராஜபக்~hக்களின் ஆட்சியேமக்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீரவுகாணக் கூடியவல்லமைஉடையதுஎனபரந்துபட்டமக்களிடையேநிலவியஅபிப்பிராயமுமே ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்~hவுக்குமிகப் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனஎன்பதுவும் உண்மையே.
கோத்தபாய–மஹிந்த ராஜபக்சக்களின் ஆட்சிமீதுநாட்டுமக்கள் குறிப்பாகபெரும்பான்மையானசிங்களமக்கள் பெரும் நம்பிக்கையோடுமிகப் பாரியஅளவிலானஎதிர்பார்க்கைகளோடும் உள்ளனர்.
இலங்கைஅரசானதுஅதனதுபொருளாதாரவல்லமைக்கும் மீறிய இராணுவமற்றும் பொலிஸ் ஆட்பலங்களையும் மிகவும் திறமையானஉளவுநிறுவனங்களையும் கொண்டிருக்கிறது. ஜனாதிபதிகோத்தபாயஅவர்கள் மிகச்சிறந்த இராணுவநிர்வாகிஎன்பதனால் அவரதுஆட்சியானதுநாட்டின் தேசியபாதுகாப்புவிடயத்தில் மிகவும் ஆற்றலுள்ளதாகசெயற்படும் எனநம்பப்படுகிறது.
ஆனால்,சாதாரணமக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாட்டின் தேசியபொருளாதாரஅபிவிருத்தியைமுன்னோக்கிநகர்த்தும் விடயத்திலும் அரசாங்கம் சாதனைகளைஆற்றுமாஎன்றகேள்விக்கானபதில் தொங்கியநிலையிலேயேஉள்ளது.
அதுதொடர்பானஅனைத்துவிடயங்களையும் இங்குஆய்வதுபொருத்தமற்றதாகும் என்பதனால் சிலபிரதானமானவிடயங்களைநோக்குவதனூடாககோத்தபாய–மஹிந்த ராஜபக்~ அரசாங்கம் பொருளாதாரஅபிவிருத்திவிடயத்தில் எதிர்கொள்ளவுள்ளபொருளாதாரசிரமங்களை–நெருக்கடிகளைபுரிந்துகொள்ளமுடியும்.
கடனில் மூழ்கியுள்ளநாடு
நாட்டின் பொருளாதாரஅபிவிருத்திக்கானஆரசாங்கத்தின் மூலதனசெலவுகளுக்குஒருரூபாவைக் கூட அரசின் வரிவருமானத்திலிருந்துபெறமுடியாதநிலையிலேயேதான் கடந்த இருபத்தைந்துஆண்டுகளுக்குமேலாக இலங்கைஅரசாங்கத்தின் நிலைமை இருந்துவருகின்றது.
அரசாங்கத்தின் மீண்டெழும் – நடைமுறைச் செலவீனங்களில் ஒருபகுதியைச் சமாளிப்பதற்கேஅரசாங்கம் கடன் வாங்கவேண்டியநிலையிலேயேஉள்ளது: ஒருபாலத்தையோஅல்லதுஒருபள்ளிக்கூடக் கட்டிடத்தையோ கூட இலங்கைமக்களின் வருமானத்தில் கட்டமுடியாதநிலையிலேயேஅரசாங்கத்தின் வரிவருமானஅளவுஉள்ளது.
வருடாவருடம் அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டுநிறுவனங்களிடமிருந்தும் வாங்கும் கடன் தொகைஅதிகரித்தபடியேஉள்ளது. அரசாங்கத்தின் கடன் சுமைதற்போதுதேசியவருமானத்தோடுஅளவிடுகையில் 72 சதவீதமாகஉள்ளது. மிகவிரைவில் அது 80 சதவீதமாகஆகிவிடும் எனக் கணிப்பிடப்படுகிறது.
வேலைவாய்ப்பில்லாதுவிரக்தியில் இளைஞர் படை
பலலட்சக் கணக்கான இளைஞர்கள் தமக்குவேலைவாய்ப்பு இல்லைஎன்று விரக்திகொண்டிருக்கின்றமைஒருபெரும் தேசியநெருக்கடியாகஉள்ளது. இலங்கையின் அரசியல் இதனைமிகவிரைவில் வெளிப்படையாகஉணரும் நிலைஏற்படலாம்.
சாதாரணதரமும் சித்தியடையாதஒருலட்சம் இளைஞர்களுக்குவேலைவாய்ப்புவழங்குவதுதொடர்பாக ஜனாதிபதிஅறிவித்துள்ளமைவேலைவாய்ப்பின்மையின் எல்லைமீறியநிலையைக் காட்டுவதாகஉள்ளது.
பல்கலைக் கழகபட்டம் பெற்ற 50000க்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புக் கேட்டுவீதிகளில் நின்றுபோராடிவருகிறார்கள். அவர்களுக்கு இப்போது ஜனாதிபதிமாதாந்தம் 22000 ரூபாகொடுப்பனவுடன் கூடியபயிற்சித் திட்டமொன்றைஅறிவித்திருக்கிறார். தற்காலிகமாக இந்தநெருக்கடிதள்ளிப் போடப்படலாம். இதற்காகஅரசாங்கத்துக்குஒருவருடத்துக்குகுறைந்தபட்சம் 1500 கோடிரூபாமேலதிகசெலவாகும். கேள்விஎன்னவென்றால்,ஒருவருடத்தின் பின் இவர்களுக்குஅவர்கள் பட்டதாரிகள் என்றதகுதிக்கேற்பஅவர்களுக்குபயிற்றிஅளிக்கப்படும் அதேதுறைகளில் நிரந்தரவேலைவாய்ப்புவழங்கப்படுமாஎன்பதே.
மேலும்,சாதாரணதரம் சித்தியெய்துஉயர்தரமும் படித்தபலலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் கொண்டிருக்கும் ஆத்திரம் புகைந்துகொண்டிருப்பதைசாதாரணமக்கள் மத்தியில் உலாவுபவர்களால் காணமுடிகின்றது. 15 மற்றும் 30 வயதுக்குஉட்பட்ட இளைஞர்களில் சுமார் 20 சதவீதமானோர் உரியவேலைவாய்ப்புக்களைத் தேடுபவர்களாகஉள்ளனர். இந்த இளைஞர்களைஉள்ளீர்க்கும் வகையில் அரசிடமோதனியாரிடமோவளர்ச்சியடைந்தஉயர்தரதொழில் நிறுவனங்கள் இங்கு இல்லை.
விவசாயம் என்பது இங்குவேறுவழியில்லாதகுடியானவனின் பொருளாதாரத் துறையாகவேஉள்ளது. இத்துறையில் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கூட ஆர்வம் காட்டவில்லை.
அரசதுறைகளில் உள்ளஊழியர்களுக்கானசம்பளம் இங்குஎந்தவகையிலும் கவர்ச்சிகரமானதாக இல்லை. இருப்பினும் அரசவேலைவாய்ப்புக்களேவாழ்க்கைக்கானபொருளாதாரத் தளத்தைநிரந்தரமாகஉத்தரவாதம் செய்யக் கூடியதுஎன்பதேபரந்துபட்டமக்களிடையேஉள்ளகணிப்பாகும். கணிசமானவருமானம் தரும் வகையாகமத்தியகிழக்குநாடுகளில் வேலைவாய்ப்புக்கள் கிடைத்தநிலைமைகள் இப்போதுஅவற்றின் இயலாஎல்லையைத் தொட்டுவிட்டன. மத்தியகிழக்குநாடுகளிலானயுத்தநிலைமைகளும் அந்தநாடுகள் தொடர்பானஆசைகளைநிராகரித்துவிட்டன.
வளர்ச்சியடைந்தமேற்குலகநாடுகளைநோக்கிபயணிக்கின்றஆசைகளேநாட்டிலுள்ள இளைஞர்களிடையே – அவர்களின் பெற்றோர்களிடையேபரவிக்கிடக்கின்றது. இது தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல. இப்பொழுதுசிங்களவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது. ஆனால் இது பலமில்லியன் ரூபாக்களைஆரம்பசெலவாகமேற் கொள்ளக் கூடியவர்களுக்குமாத்திரமேசாத்தியமாகின்றது.
இங்கு 10ம் வகுப்புபடித்தவர்கள் தொடக்கம் பட்டதாரிகள் வரையுள்ள இளைஞர்களிடையேஅரசாங்கவேலைவாய்ப்பைப் பெறுவதே இலக்காகஉள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போதானபிரச்சாரங்கள் அவ்வாறானதொருநம்பிக்கையையே–எதிர்பார்க்கையையே இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.
ஜனாதிபதியின் ஒருலட்சம் பேருக்கானவேலைத்திட்டமும் அரசாங்ககாரியாலங்களிலானஉத்தியோகமாகவேபெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்ததிட்டத்தின்படிவேலைவாய்ப்புவழங்கப்படவுள்ளஒருலட்சம் பேருக்கும் 35000 ரூபாமாதசம்பளம் எனவும் அறிவித்துள்ளார். இதன் சாத்தியம் பெரும் கேள்வியைஎழுப்புகின்றது. இவ்வாறுவேலைவாய்ப்புவழங்குவதாக இருந்தால் வெறும் சம்பளம் மற்றும் கொடுப்பனவாகமட்டும் அரசதிறைசேரிவருடாந்தம் புதிதாக–மேலதிகமாக 5000 கோடிரூபாவைவழங்குவதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
இருக்கும் ஊழியர்களுக்கேசம்பளம் கொடுக்கதிணரும் அரசு
இலங்கைஅரசின் வருமானநிலையைப் பார்ப்போமாயின் நாட்டிலுள்ளஉழைப்புசக்தியில் 10 சதவீதத்தினரைக் கூட ஊழியர்களாககொண்டிருப்பதற்குஅரசுக்குபொருளாதாரத் தகுதியில்லை. ஆனால் இங்குஏற்கனவே 15 சதவீதத்தினர் அரசவேலைகளில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதாவது 4 லட்சம் பேருக்குமேற்பட்டோர் அரசசேவைகளில் மேலதிகமாகவேஉள்ளனர்.
இதற்குமேலும் அரசவேலைவாய்ப்புகளைவழங்கும் வல்லமையைஅரசாங்கம் எங்கிருந்து? எப்படிப் பெறும்? என்பதுகேள்விகளாகும். தேர்தல் அரசியல் மேடைவாக்குறுதிகளை ஜனாதிபதிஎவ்வாறுபொருளாதாரநடைமுறையாக்கப் போகிறார் – அதற்காககடைப்பிடிக்கவுள்ளகொள்கைரீதியானபொருளாதார மூலோபாயங்கள் எவைஎன்பவற்றைபொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாமாயமான்
தனியார் கம்பனிகளின் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாநாட் சம்பளஉத்தரவாதம் கோரிகடந்தபலஆண்டுகளாகபோராட்டங்கள் நடைபெற்றன. ஜனாதிபதிகோத்தபாயஅவர்கள் தேர்தற் பிரச்சாரகாலகட்டத்தில் அதற்குபகிரங்கஉத்தரவாதம் வழங்கினார் ஆனால் இப்போதுதனியார் தேயிலைத் தோட்டகம்பனிக் காரர்களோடுவாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டியேற்பட்டுள்ளது. இப்போது 850 ரூபாதான் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குநாட் கூலியாகவழங்கப்படுகிறது.
தேயிலைத் தோட்டக் கம்பனிகள் 150 ரூபாவை கூடுதலாகக் கொடுப்பதற்கு ந~;டஈடாகதமக்குமறைமுகமாகசலுகைகளைக் கோருகிறார்கள். அதனை இன்னொருவகையில் பார்த்தால் அரசாங்கமே இந்த 150 ரூபாவைசெலுத்தவேண்டுமெனவலியுறுத்தும் மார்க்கமாகவேஉள்ளது.
இந்தவிடயத்தில் சுமார் இரண்டுலட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். 150 ரூபாவைஅரசாங்கமேநேரடியாகவோமறைமுகமாகவோசெலுத்துவதாக இருந்தால், 22 நாட்கள் வேலைஎன்றுகொண்டாலும் கூட வருடத்துக்குசுமார் 800 கோடிரூபாவைஅரசாங்கம் மானியமாகவழங்குவதற்குதயாராகவேண்டும்.
அல்லது,தனியார் கம்பனிகளின் தேயிலைத் தோட்டங்களைசுவீகரித்துஅரசமயமாக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது. அதுசாத்தியமா? அவ்வாறாயினும் கூட 1000 ரூபாநாட் கூலியாகவழங்கப்படுவதைஅரசாங்கத்தால் உறுதியாக்கமுடியுமா? அப்படித்தான் இந்தவருடம் அரசாங்கம் அதன் சுமையைஏற்றுக்கொண்டாலும் கூட அடுத்தடுத்தஆண்டுகளில் தொழிலாளர்களின் கூலிஉயர்வுக் கோரிக்கையின் போதுஎழும் நிதிச் சுமையைஇப்போதுபோலவேஅப்போதும் தொடர்ந்துதாங்குமா? இவை இன்னமும் பதிலில்லாதகேள்விகளாகும்.
தூய்மையானஆட்சி–கானல் நீரா? நடைமுறையாகுமா?
ஜனாதிபதிஅவர்கள் நாட்டின் பொருளாதாரமுன்னேற்றத்திற்குஅரசநிர்வாககட்டமைப்புகள் சிக்கனமாகவும், ஊழல் மோசடிகள் அற்றவையாகவும் இருக்கவேண்டுமென்பதைநிலைநாட்டப் பார்க்கிறார். தொழிற்துறைவளர்ச்சியற்றமுதலாளித்துவதாராளவாதபொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டநாடுகளில் அதிகார து~;பிரயோகங்களும்,லஞ்சஊழல்கள் மற்றும் நிதிமோசடிகளும் அவற்றின் அரசநிர்வாககட்டமைப்பின் பிரிக்கமுடியாதகலாச்சாரமாகஉள்ளன. அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியின் இராணுவநிர்வாகஆற்றல் அதனைசாதித்துவிடும் என்றுநம்புவற்குகடினமாகஉள்ளது. எனவே ஜனாதிபதியின் அதிரடிநடவடிக்கைகள்,“புது விளக்குமாறுநன்றாகக் கூட்டும்”என்பதுபோன்றதாஎனவும் கேள்விஎழுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலின் பின்னர் இந்தஅரசாங்கம் முழு வீச்சில் அபிவிருத்திகளைநோக்கிசெயற்படும் எனஆட்சியாளர்கள் மக்களைநம்பவைக்கவாய்ப்புண்டு. யுத்தம் முடிவுற்றபின்னர் ஏற்பட்டபல்வேறுசாதகமானநிலைமைகளால் சாதித்ததைப் போன்;று எதிர்வரும் காலங்களில் அவ்வாறானசாதகநிலைமைகளுக்குசாத்தியமில்லை. அவ்வாறிருக்கஎதிர்வரும் காலத்தைஎவ்வாறுபுதியஅரசாங்கம் சாதனைகள் கொண்டதாகஆக்கப் போகின்றதுஎன்பதற்குபொருளியலாளர்களிடம் தக்கபதில் இல்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

16- 02- 2020,கொழும்புதினகரனில் வெளிவந்த இக்கட்டுரைசிறுதிருத்தங்களுடன் இங்குதரப்படுகின்றது.