இர‌ண்டாம் உல‌க‌ப்போர் வ‌ர‌லாற்றில் இருட்ட‌டிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ உண்மை இது

– ஜேர்ம‌னி முற்றாக‌ தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு முன்ன‌ரே, 1943 ம் ஆண்டு சோவிய‌த் யூனிய‌னில் நாஸிக‌ளின் போர்க்குற்றங்களை‌ விசாரிக்கும் நீதிம‌ன்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

– போர்க்குற்ற‌ நீதிம‌ன்ற‌ அம‌ர்வுக‌ள் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் முன்னிலையில் ந‌ட‌ந்துள்ள‌ன‌. பாதிக்க‌ப் ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள் வ‌ழ‌ங்கிய‌ சாட்சிய‌ங்க‌ள் யாவும் ப‌திவு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. குற்றம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌, நூற்றுக்க‌ண‌க்கான‌ நாஸி கிரிமின‌ல்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

– நாஸிக‌ள் கைப்ப‌ற்றிய‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ளில் தான், முத‌ன் முத‌லாக‌ யூத‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

– லாட்வியா, உக்ரைன் போன்ற‌ சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளை சேர்ந்த‌ தேசிய‌வாதிக‌ள் நாஸிகளுட‌ன் ஒத்துழைத்த‌ன‌ர். பெரும்பாலும் அவ‌ர்க‌ளே யூத‌ர்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். நாஸிக‌ள் அவ‌ற்றை ஆவ‌ண‌ப் ப‌டுத்தி வைத்த‌ன‌ர்.

– இன‌ப்ப‌டுகொலைக்கு த‌ப்பிய‌ யூத‌ர்க‌ள், சோவிய‌த் செம்ப‌டையில் சேர்ந்து கெரில்லாத் தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்தி இருந்த‌ன‌ர்.

– மேற்கத்திய‌ நாடுக‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ நியூர‌ன்பேர்க் போர்க்குற்ற‌ விசார‌ணை நீதிம‌ன்ற‌ம், நான்கு நாஸி குற்ற‌வாளிக‌ளை ம‌ட்டும் தூக்கிலிட்ட‌து.

– ப‌ல‌ருக்கு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்ட‌ ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை, ஆயுள் த‌ண்ட‌னையாக‌ மாற்ற‌ப் ப‌ட்டு, சில‌ வ‌ருட‌ங்க‌ளின் பின்ன‌ர் விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

நியூர‌ன்பேர்க் நீதிம‌ன்ற‌ விசார‌ணைக‌ளில் நாஸி குற்ற‌வாளிக‌ள் வ‌ழ‌ங்கிய‌ வாக்குமூல‌ங்க‌ள்:

– //சோவிய‌த் யூனிய‌ன் ஜேர்ம‌னிக்கு எதிராக‌ போர் தொடுப்ப‌த‌ற்கு முன்ன‌ர் முன் எச்ச‌ரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ சோவிய‌த் யூனிய‌ன் மீது ப‌டையெடுத்தோம்.//

– //யூத‌ர்க‌ள் எல்லோரும் க‌ம்யூனிஸ்டுக‌ள் என்ப‌தால் தான் யூத‌ர்க‌ளை கொன்றோம். குழ‌ந்தைக‌ளை விட்டுவைத்தால் அவை நாளை பெரிய‌வ‌ர்க‌ளாக‌ வ‌ள‌ர்ந்த‌ பின்ன‌ர் எதிரிக‌ளாக‌லாம் என்ப‌தால் யூத‌க் குழ‌ந்தைக‌ளையும் கொன்றோம்.//

இர‌ண்டாம் உல‌க‌ப் போரில் சோவிய‌த் செம்ப‌டை வென்றிருக்கா விட்டால், நாஸிக‌ள் இனப்படுகொலை ஆதார‌ங்க‌ள் அனைத்தையும் அழித்து விட்டிருப்பார்க‌ள். ஏற்க‌ன‌வே ப‌ல‌ த‌ட‌ய‌ங்க‌ள் அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. ஆனால், செம்ப‌டை மிக‌ வேக‌மாக‌ முன்னேறிய‌தால் எல்லாவ‌ற்றையும் அழிக்க‌ முடிய‌வில்லை. சோவிய‌த் இராணுவ‌ம் ஜேர்ம‌னியை பிடித்திரா விட்டால், நியூர‌ன்பெர்க் நீதிம‌ன்ற‌மும் ந‌ட‌ந்திருக்காது.

(Kalai Marx)