உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கடிதத் தலைப்புடன் இரு முரண்பட்ட அறிக்கைகள்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற கடிதத் தலைப்பில் இரு முரண்பட்ட அறிக்கைகள் நேற்று பெப்ரவரி 8 இல் வெளியிடப்பட்டு உள்ளது. முதலாவதாக வந்த அறிக்கை யாழ் பல்கலைக்கழகங்களில் உள்ள துறைசார்ந்த பீடங்களின் மாணர் ஒன்றியங்கள் இணைந்து உடன்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கையாக அப்பீடங்களின் தலைவர்கள் செயலாளர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது. இதுவே உத்தியோக பூர்வ அறிக்கையாக வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையில் மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் முகாமைத்துவ வர்த்தகபீட மாணவர் ஒன்றியத் தலைவர் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஆகியோருடன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கி கிருஸ்ணமீனன் க்குப் பதிலாக செயலாளர் கெ ஜக்சன் கையெழுத்திட்டு இருந்தார்.

தமிழ் காங்கிரஸின் ஆதரவாளரான கி கிருஸ்ணமீனன் மேற்படி அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விடயங்களை உள்ளடக்கி தமிழ் காங்கிரஸ்க்கு ஆதரவாக அறிக்கையை தயாரிக்குமாறு அழுத்தம் கொடுத்துவந்தார். ஆனால் துறைசார் பீடங்களின் மாணவர் ஒன்றியத் தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. நடுநிலையான ஒரு போக்கிலேயே அறிக்கையை வெளியிட்டனர். அதனால் அந்த அறிக்கையில் கி கிருஸ்ணமீனன் கையெழுத்திடவில்லை. பதிலாக செயலாளர் கெ ஜக்சன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பாகக் கையெழுத்திட்டார்.

இப்பின்னணியில் தன்னிச்சையாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமைப் பதவியை துஸ்பிரயோகம் செய்து தனிப்பட்ட தனது விருப்பத்திற்கு அமைய தான் சார்ந்த தமிழ் காங்கிரஸ்ற்கு ஆதரவு அளிக்கின்ற வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி தன்னுடைய சொந்த அறிக்கையை யாழ் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத் தலைவராக தனது பெயரில் வெளியிட்டார்.

கி கிருஸ்ணமீனன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினதும் அதன் அங்கமான துறைசார்ந்த பீடங்களின் ஜனநாயகபூர்வமான முடிவுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயற்பட்டமை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நன்மதிப்பை மேலும் கீழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் கி கிருஸ்ணமீனனும் அவர் சார்ந்த கட்சியினரும் ஏனையவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகவும் துரோகிகள் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இவ்விரு அறிக்கைகளும் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது:

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை:

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் அறிக்கை

UoJ_SU_Local_Election_01வடகிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் இவ்வாண்டு மாசி மாதம் 10ஆம் திகதி மீண்டும் ஓர் உள்ளாட்சித் தேர்தலினை சந்திக்கின்றோம். மத்தியப்படுத்தப்பட்ட ஆட்சி சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு நன்மையளிப்பது கடினம். ஆகவே ஆட்சியதிகாரங்கள் மத்தியில் இருந்து அடிமட்டம் வரை பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் மேலும் அடி மட்டத்திலுள்ள மக்களும் கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தங்களைத் தாங்கள் ஆட்சிசெய்ய வேண்டும் என்ற நல் எண்ண நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் உள்ளாட்சி அமைப்பு முறைமை.

தமிழ் மக்களாகிய நாம் உள்ளாட்சி அமைப்புக்களில் ஆட்சியமைத்து தத்தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய அதேசமயம் தமிழ் மக்களின் தேசியம் இறைமை சுயநிர்ணயம் என்பவற்றிற்று வலுச்சேர்க்க கூடிய வகையில் இவ் உள்ளாட்சி அமைப்பு முறைகள் வடக்கு கிழக்கு பூராகவும் இயங்க வேண்டும்.

2009 ஆயுதப் போர் மெளனிக்கப்பட்டதன் பின்னர் எமது அரசியல் பலம் என்பது மிகவும் சரிந்த வண்ணம் காணப்படுகின்றது. எமது இனம் கலாச்சாரம் பண்பாடு திட்டமிட்டு சிதைப்பதன் மூலம் எமது இருப்பு சிதைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களாகிய நாம் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

இவ் உள்ளாட்சித் தேர்தலில் சகல வாக்களிக்க கூடிய தமிழ் மக்களும் தமது வாக்கினை உங்களுடைய பிரதேசத்தில் உங்களுடைய வட்டாரத்தில் உங்களுடைய பிரதேச அபிவிருத்தியில் உண்மையான அக்கறை கொண்ட முழுமையாக தன்னை அர்ப்பணித்து மக்கள் சேவையாற்றக்கூடிய ஒருவரின் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”

ஒன்றியத் தலைவர் கி கிருஸ்ணமீனனின் சொந்த அறிக்கை:

UoJ_SU_Local_Election_02யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் என்ற வகையிலும்இ தமிழ் மக்களையும் தாய் மண்ணையும் ஆழமாகி நேசிப்பவன் என்ற வகையிலும் பல சூழ்ச்சிகளையும் துரோகங்களையும் தாண்டி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக எனது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவையை உணர்கின்றேன்.

அந்தவகையில்

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்களாகிய நாம் இவ்வாண்டு மாசி மாதம் 10ம் திகதி மீண்டும் ஓர் உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்கின்றோம். மத்தியப்படுத்தப்பட்ட (ஊநவெசயடணைநன) ஆட்சிச் சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ள மக்களிற்கு நன்மையளிப்பது கடினம்இ ஆகவே ஆட்சியதிகாரங்கள் மத்தியிலிருந்து அடிமட்டம் வரை பரவலாக்கம் (னுநஉநவெசயடணையவழைn) செய்யப்ப்ட வேண்டும். மற்றும் அடிமட்டத்திலுள்ள மக்களும் கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தங்களைத் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் உள்ளூராட்சி அமைப்பு முறைமை.

தமிழ் மக்கள் உள்ளூராட்சிஅமைப்புக்களில் ஆட்சிஅமைத்து தத்தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய அதேசமயம் தமிழ் மக்களின் தேசியம்இ இறைமை மற்றும் சுயநிர்ணயம் என்பவற்றிற்கு வலுச்சேர்க்கச் கூடியவகையில் இவ்வுள்ளூராட்சி அமைப்புமுறைகள் வடக்கு– கிழக்கு பூராகவும் இயங்கவேண்டும்.

2009ல் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் உள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரநதிநிதிகள் உண்மையாகவும் நேர்மையாகவும் தாற்பரியம் அறிந்தும் தமிழ்மக்களை பிரதிநிதித்தவம் செய்கின்றார்களா?என்பது தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் கேள்விக்குரியவிடயம் ஆகியுள்ளது.

சர்வதேச விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இல்லைஇ அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் எவையும் உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் (ஐவெநசiஅ சுநிழசவ) இல்லை. சிங்கள பௌத்தமயமாக்கல் வடக்குக்கிழக்கில் மிகவும் தீவிரமாக நடந்தேறி வருகின்றது. அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி வழங்கும் செயற்பாடுகள் எவையுமில்லை. இது போன்ற பல்வேறுவிடயங்கள் இன்னமும் விடை காணப்படாதவையாகவும் தமிழ் மக்களின் இருப்பினை கேள்விக்குட்படுத்துபவையாகவும் நடந்தேறி வருகின்றன.

இப்பிரச்சினைகள் தொடர்பாகத் தொடர்ந்தும் தற்பொழுது இருக்கின்ற தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாது சலுகைகளிற்கு விலைபோவது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சமூகம் போராடிய போது தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரிற்கும் திறந்த கலந்துரையாடல் ஒன்றிற்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் விடுத்த அழைப்பிற்கு பொறுப்புக்கூற வேண்டிய அனேக பாராளுமன்ற உறுப்பினர்களால் அவமரியாதை செய்யப்பட்டது. உண்மையாக கண்டிக்கத்தக்கதுடன் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்றதன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் இச்சம்பவம் அமைந்துள்ளது.

கடந்த 3 தசாப்தங்களிற்கு மேலாக வடகிழக்கு தமிழ்மக்களின் வாழ்வியலுடன் இணைந்து தமிழ் மக்களை சரியான பாதைக்கு வழிகாட்டும் ஓர் பொறுப்புள்ள அமைப்பான யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இம் முறையும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்களை சரியான பாதையில் வழிகாட்ட வேண்டிய பொறுப்பினை உணர்ந்து கொள்கின்றது

எனவே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இவ் அறிக்கையில் இனங்காணப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி மற்றும் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்க்கக்கூடிய பிரதிநிதிகளைத்தெரிவு செய்யுமாறு எமது மக்களை உரிமையுடனும் பணிவுடனும் கேட்டுகொள்கின்றோம்.

(நன்றி: தேசம் நெற்)