துரோகிகள்

துரையப்பாவில் தொடங்கிய துரோகி என்ற வார்த்தை குமாரசூரியர்,தியாகராசா,கனகரத்தினம்,இராசதுரை என நீடித்தது.இதை அன்றைய கூட்டணியினரும் நாங்களும் வேடிக்கை ்பாரத்தோம்.வேடிக்கை வினையானது.கனகரத்தினத்தைச் சுட்ட உமாமகேஸ்வரன் ,மனோ மாஸ்ரர்,ஒபரோய் தேவன் என தொடர்ந்தது.இறுதியில் எல்லோருமே துரோகிகள் ஆக்கப்பட்டோம். பிரச்சினைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த அமிர்தலிங்கம் ,தர்மலிங்கம்,ஆலாலசைந்தரம்,யோகேஸ்வரன் ஆகியாரும் இதற்குப் பலியானார்கள்.

முதலாவது துரோகிகளாக துரையப்பா, பஸ்தியாம்பிள்ளை, பத்மநாதன், தியாகராசா பெயர்கள் வந்ததால் தமிழ் சமூகம் அவர்கள் பெயரை இன்னமும் மறக்கவில்லை.அவரகளின் பார்வைகளில் நாங்களும் துரையப்பாக்களே. அண்ணன் நடேசன் காவலூர் ஜெகநாதன் பற்றி எழுதியிருந்தார்.அன்று அவரை துரோகி என சொல்லிக் கொன்றவரகளும் துரோகிகள் என விரட்டப்பட்டனர்.விதியின் கடிவாளம் எப்போதும் நமது கையில்தான்.ஆண்டவன் கையில் இல்லை.

(விஜய் பாஸ்கரன்)