முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் – அத்தியாயம் 5

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால் மணிநேரமாக வவுனியா வாகன தொடரணி சோதனை முகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகைவாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தேன். கையில் துப்பாக்கியுடன் இராணுவச் சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப் பார்தவாறு நின்றிருந்தான். எனக்கு நெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனதுபக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச.

அரசசார்பற்றஉத்தியோகஸ்தர்கள்,வாகனசாரதிகள் எனபலர் தொடரணிபுறப்படுவதற்காககாத்திருந்தனர். ஏதோதடைசெய்யப்பட்டபொருட்களைகடத்தமுற்பட்டுபிடிபட்டுவிட்டேன் என்றுஅவர்கள் எண்ணியிருக்கக்கூடும். விடலைப்பருவத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுதுகையும்மெய்யுமாகபிடிபட்டதுபோன்றஉணர்வுஒருகணம் என்னைஆட்கொண்டது.

ஒருமணிநேரத்திற்க்குமுன்னரேசகலபொருட்களும் சோதனையிடப்பட்டுவாகனத்துக்குள் ஏற்றியாகிவிட்டது. ஒருசிலபத்திரிகைகளும் சஞ்சிகைளும் மாத்திரமே என்வசம் இருந்தன. அவற்றையும் எடுத்துக்கொண்டு அந்த இராணுவச்சிப்பாயை பின்தொடர்தேன்.ஒர் அறையைக் காட்டி உள்ளே செல்லுமாறு பணிவாக் கூறினான் அந்தச் சிப்பாய்.

அவனதுபணிவு எனக்குகொஞ்சம் தென்பைத்தந்தது. அது ஒர் நீண்டவிசாலமானஅறை. எனது வரவை எதிர்பார்த்தவாறு அங்கிருந்த உயர் அதிகாரி“Hello come on in” என்றார் சிரித்தவாறே. எனக்கிருந்தபயம் ஓரளவுநீங்கியது.அவர் காட்டியகதிரையில் அமர்ந்தேன். மேசையில் இரண்டு கொக்காக் கோலாபோத்தல்கள் இருந்தன. ஒன்றைஎனக்குமுன் தள்ளிவிட்டு மற்றையதை அப்படியே அண்ணாந்தபடியே பருகினார். அவரது பாணியை நானும் கொப்பியடித்தேன். நிண்டநேரம் வெய்யிலில் நிண்டஎனக்கு அது அமிர்தமாக இருந்தது. உடம்பும் மனதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதுபோன்றுஉணர்ந்தேன்.

வாகனத்தொடரணி இன்று புறப்பட சற்று தாமதமாகுமென பேச்சைஆரம்பித்த அவர் எனது விபரங்களை மேலோட்டமாக கேட்டறிந்தார். இவ்வளவு பேர் உள்ள இடத்தில் இவர் ஏன் என்னை மாத்திரம் கூப்பிட்டார் என எனக்கு புரியவில்லை. அதை அவர் உணர்ந்தவர் போல் “ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம் நீர் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தது ஒரு இராணுவவீரனுக்கு சந்தேகத்தை எழுப்பிவிட்டது, அவன்  உம்மை விசாரிக்க வேண்டுமென என்னிடம் கூறினான். அதுதான் நீர் அப்படி என்ன பெரிசாய் வாசிக்கிறீர் என அறியத்தான் கூப்பிட்டனான்,”என அழகான ஆங்கிலத்தில் கூறினார். ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் என்னிடமிருந்த சகலவற்றையும் அவரிடம் கொடுத்தேன். அதில் இரண்டு மூன்று SPORTSTAR சஞ்சிகைகள், ஞாயிறு ஆங்கிலபத்திரிகைகள் சில, சரிநிகர், துக்ளக், Fredrick Forsyth    இன் ஆங்கிலநாவல் ஒன்றுஎன்பன இருந்தன. ஒவ்வொன்றையும் மேலோட்டமாக புரட்டிப் பார்த்துவிட்டு ஆங்கில பத்திரிகைகளை உடனடியாகவை திருப்பித் தந்தார். பயபக்தியுடன் அவற்றைப்பெற்றுக்கொண்டேன். Fredrick Forsyth இன் ஆங்கிலநாவலின் பின்னட்டையிலுள்ள சுருக்கத்தை வாசித்துவிட்டு அந்த ஆசிரியரின் வேறு சில நாவல்களைதான் வாசித்ததாகவும் ஆனால் அந்தகுறிப்பிட்ட நாவலைதான் வாசிக்கவில்லைஎன்றார். “அப்டியாயின் நீங்கள் இதைவைத்திருங்கோ”என்றேன் சற்றுமனவருத்தத்துடன். அவர்ஒருகணம் யோசித்துவிட்டு“இதைஎன்னால் கொழும்பில் இலகுவாகவாங்கமுடியும் ஆனால் வன்னியில் உம்மால் இதைவாங்கமுடியாது”என்றுஅதைதிருப்பித்தந்தார். எங்கேஅது கை நழுவிப்போய்விடுமோஎன்றுபயந்தநான் அதைபறிக்காதகுறையாகபெற்றுக்கொண்டேன். அதன் பின் SPORTSTARகளைதந்துவிளையாட்டுக்களைப்பற்றிகதைக்கஆரம்பித்;தார்  அந்தநாட்களில் உலகக்கோப்பைகால்பந்துபோட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவர் பிரேசில் விசிறி. எனக்கும் கால்பந்தில் அதிகஆர்வம் இருந்ததால் அந்தபோட்டிகள் பற்றிகால் மணிநேரம் கதைத்தோம். இறுதியாகஎன்னிடமிருந்தசரிநிகர்,துக்ளக் பற்றிதுருவித்துருவிகேட்டார். நான் அவற்றில் வெளியானசெய்திகள் கட்டுரைகள் குறித்து ஓரளவுவிரிவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற கவனமாககேட்டுக்கொண்டிருந்தஅவர் இறுதியாக“இவற்றைக் கொண்டுபோகபுலிகள் விடுவார்களா”எனஆச்சரியத்துடன் கேட்டார். “புலிகளின் சோதனைச்சாவடியில் நிற்கும் எல்லோரும் சரியாகத் தமிழ் வாசிக்கமாட்டார்கள்”என்றேன்சிரித்துக்கொண்டே,அவற்றைஎன்னிடம் தந்தார்.

“போமஸ்துதிமாத்தையா”

“you are welcome”

விடைபெற்றுவெளியேறினேன் ஒருநிம்மதிப் பெருமூச்சுடன்.

(முள்ளுள்ளபுதர்கள் வளரும்…..)