இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜெருசசேலத்தை, இஸ்ரேலின் தலைநகரமாக, ஐக்கிய அமெரிக்கா அங்கிகரிக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன்’தெரிவித்ததாக, அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு நடைபெருமானால், ஐக்கிய அமெரிக்க கொள்கையின் பாரிய மாற்றமாக இது அமையும்.

நியூயோர்க்கிலுள்ள ட்ரம்பின் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற, ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நீடித்த சந்திப்பிலேயே, தனது நிர்வாகத்தின் கீழ், இஸ்ரேலிய தேசத்தின் பிளவுபடாத தலைநகரமாக ஐக்கிய அமெரிக்கா அங்கிகரிக்கும் என நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஜெருசசேலத்தையே, தமது தலைநகரமாக அழைக்கின்ற நிலையில், வேறு சில நாடுகள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்கின்றன. ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள், டெல் அவிவ்விலேயே தூதரகங்களைப் பேணுகின்றன.

இஸ்ரேலுக்கு அருகில், மேற்குக் கரை, காஸா நிலப்பரப்பில், தாங்கள் உருவாக்க விரும்பும் தேசத்துக்கான தலைநகராக கிழக்கு ஜெருசசேலத்தை வேண்டுகின்றனர். கிழக்கு ஜெருசசேலமானது, 1967ஆம் ஆண்டு போரின்போது இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இதேவேளை, ட்ரம்பின் போட்டியாளரான, ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனையும் தனியே நெதன்யாகுந சந்தித்திருந்தார். இச்சந்திப்பானது, ஒரு மணித்தியாலத்துக்கும் குறைவாகவே நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க, இஸ்ரேலிய உறவுக்கான தனது கடப்பாட்டிலும் இரு நாடுகளுக்கிடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதிலும் உறுதியாக இருப்பதாக ஹிலாரியின் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.