ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு

(சட்டத்தரணி இ. தம்பையா)

இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் 18 மாதங்கள் வரை சம்பள உயர்வு இன்றி உழைப்பதற்கும் வாழ்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் இன்று பொறுமை இழந்துள்ள நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் உடனடியாக நியாயமான சம்பளத்தை வழங்க முன்வர வேண்டும். தோடத்த தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றினை கம்பனிகள் அறியாதிருக்க நியாயமில்லை. எனவே, பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி பாரிய தொழில் உறவு பிரச்சினையாக மாற்றி பெருந்தோட்டக் தொழிற்துறையை அழிக்கும் நடவடிக்கையை விடுத்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கும்; உள்ளது. அப்பொறுப்பை கம்பனிகளும் அரசாங்கமும் நிறைவேற்றாவிடின் விளைவுகளுக்கான பொறுப்பையும் கம்பனிகளும் அரசாங்கமுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் கம்பனிகளின் இன்றைய விடாப்பிடியான நிலையை கருத்திற் கொண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் மற்றும் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தமது தனித்தனியான நிலைப்பாடுகளை விட்டு தொழிலாளர்களுக்காக ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளன.

இதனை உணர்ந்து மக்கள் தொழிலாளர் சங்கம் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டமொன்றுக்கு பகிரங்க அழைப்பை விடுகிறது. அந்த வகையில், எதிர்வரும் 2016.10.09ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஹட்டன் சமூகநல நிறுவனம் (ஊளுஊ) மண்டபத்தில் (இல.30, புகையிரத நிலைய வீதி, ஹட்டன்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்குகொள்ளுமாறு தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக அழைப்பு விடுகின்றோம். இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பனிகள் விடாப்பிடியாக இருந்து வருவதுடன் மைத்திரி-ரணில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினையை கண்டு கொள்வதாக இல்லை. இப் பின்னணியில், தொழிலாளர்கள் நியாயம் கேட்டு பல இடங்களில் தன்னிச்சையாகவும் சில இடங்களில் தொழிற்சங்கங்களின் ஆதரவோடும் எதிர்பார்ப்பாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். என்றாலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கம்பனிகளையும் அரசாங்கத்தையும் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்க வற்புறுத்துவதனை மையப்படுத்தியே அமையவேண்டுமேயன்றி, கடந்த 18 மாதங்களாக இடம்பெற்று வருவது போன்று அறிந்தோ அறியாமலோ தொழிற்சங்க – அரசியல் தலைவர்கள் தங்கள் பலப் பரீட்;சைக்கான களமாக தொழிலாளர்களின் உணர்வு பூர்வமான போராட்ட எழுச்சியை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தங்களின் கௌரவ பிரச்சினைகளை ஒதுக்கிவைத்து விட்டு தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினையாக உள்ள இச் சம்பளப் பிரச்சினையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறான செயற்பாட்டின் மூலமே கம்பனிகளின் விடாப்பிடியான போக்கை முறியடிக்க முடியும்; தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கமுடியும்.

இம்முறையும் தீபாவளியைக் காட்டி குறைந்த சம்பள உயர்வை வழங்குவதனூடாக சம்பள ஒப்பந்தத்தை மேற்கொள்ள கம்பனிகள் திட்டமிட்டிருக்கின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களுக்கிடையில் சம்பள கோரிக்கை தொடர்பில் எவ்வித ஒருமைப்பாடும் இதுவரை இல்லாத நிலையில் அது கம்பனிகளுக்கு சார்பான அம்சமாக உள்ளது. கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் நிலுவை சம்பளத்தை வழங்க முடியாது என கம்பனிகள் கூறியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் இனிவரும் காலங்களில் 3 வருடங்களுக்கு ஒருமுறை நடத்துவதற்கான முன்மொழிவையும் கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதனூடாக இனி 3 வருடங்களுக்கு ஒரு முறைதான் சம்பள உயர்வு என்ற அபாயம் தொழிலாளர்கள் முன் உள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் ஒருவரை ஒருவர்குற்றம் சாட்டுவதை விடுத்து கம்பனிகளுக்கு எதிராக மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டங்கள் பற்றி சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நியாயமான சம்பள தொகை என்ன என்பதை தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு பொது முடிவை எடுப்பதே மக்கள் போராட்டத்தை முறையாக வழிப்படுத்த வாய்பை ஏற்படுத்தும். நிலுவை சம்பளம் இன்றியும், மூன்று வருடத்திற்கு ஒரு தடவைதான் சம்பளம் என்ற ஏற்பாடுகள் கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுமாயின் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டாலும் அதற்கு எதிராக செயற்பட வேண்டியுள்ளது.

எனவே, இவ்விடயங்களை தொடர்பில் முடிவுகளை எடுக்க மக்கள் தொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று எதிர்வரும் ஒன்பதாம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அக்கறையுள்ள தனிநபர்களையும் ஹட்டன் சமூகநல நிறுவன (ஊளுசு) மண்டபத்திற்கு வருமாறு மீண்டும் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு மின்னஞ்சல்: pறரளசடையமெயளூபஅயடை.உழஅ இ.தம்பையா 071-4302909ஃ எஸ்.விஜயகுமார் 071-6275459 ஃஎஸ். புண்ணியசீலன் 071-5651319.