சுரேசிடம் இருந்து வெளியேறும் சிவசக்தி ஆனந்தன்!!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கள்ள மௌனம் சந்தேகத்தைத் தருவதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மேலாதிக்கம் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் இருப்பதாலேயே வடக்கில் தமிழர்கள் மாத்திரம் வாழும் பகுதிகளிலும் பெரும் எடுப்பில் பௌத்த விகாரைகள், புத்தர் சிலைகள் உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த நடவடிக்கைகளை கண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காது மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தே எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டது.. எனினும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த எழுக தமிழ் பேரணியையும், அதில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சரையும் இனவாதிகளாக அடையாளப்படுத்திவரும் தென்பகுதி சிங்கள தலைமைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எந்த எதிர்ப்பையும் வெளியிடாது மௌனம் காத்துவருவது தொடர்பிலேயே சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் கூட்டமைப்பின் தன் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கின்ற சூழலில் எழுந்த மானமாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தன்னையும் இணைப்பது மனதிற்கு கஸ்ரமாக இருப்பதாகவும் இப்படி தொடர் பழிச் சொற்களுடன் நின்மதியாக வாழ முடியாது எமது தலைவர் சுரேசிடம் மரியாதை என்பது மிக மிக குறைவு.

விரைவில் நல்ல முடிவை எடுத்து கட்சியை விட்டு அகலுவதைத் தவிர வேறு வழியில்லை என முல்லைத்தீவில் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் ஜெகனாதனின் மரண வீட்டில் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கூறி கவலைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுவதுடன் வன்னி மக்கள் இவரின் கருத்தால் தன்னை பிழையாக விளங்கக் கூடாது அதற்காக விரைந்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.