தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது

 

அகதிகள் தங்களது சொந்தச் செலவில் விமானம் மூலம் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பினர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் தமிகத்தில் உள்ள அகதிகள் தாயகம் செல்லத் தொடங்குவது அதிகரித்துள்ளது. தாயகம் திரும்புகிறவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் மூலமும்,தங்களது சொந்தச் செலவிலும் செல்கின்றனர்.ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் மூலம் தாயகம் திரும்புகிறவர்களுக்கு அந்த நிறுவனம் விமான ரிக்கட் மற்றும் முகாமில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் பிரயானச் செலவினையும் வழங்குகிறது.


சொந்தச் செலவில் தாயகம் திரும்பகிறர்கள் தங்களது பணத்திலேயே சகலவற்றையும் செய்ய வேண்டும்.அப்போ ஏன் இவர்கள் சொந்தச் செலவில் செல்கிறார்கள் என்ற கேள்வி எமக்குள்ளே இயல்பாக எழுகிறதல்லவா? சொந்தச் செலவில் செல்கிறவர்கள் தாயகம் செல்வதற்கான நடைமுறைகளைச் செய்து துரித கதியில் செல்லமுடியும.; குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்தச் செல்லவேண்டும் என்பதில்லை..ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானகத்தின் மூலம் செல்பவர்கள் தங்களது இஸ்டத்துக்கு செல்ல முடியாது. குறிப்பாக குடுப்ப உறுப்பினர்களை முகாம்களில் விட்டுவிட்டு செல்ல முடியாது என்பது அவர்களது விதியாக உள்ளது.
இந்த இருவழிகளிலும் செல்பவர்களுக்கு இலங்கை அரசாங்கம் செய்யும் உதவிகள் கிடைப்பதில் பாரபட்சமில்லை.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் மற்றும் கூடல்நகர் அகதிகள் முகாம்களில் இருந்து 4 பெண்கள்,1 ஆண் என 5 பேர் 6.5.15 அன்று பி.ப 12.45 இற்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சொந்தச் செலவில் தாயகம் திருப்பியுள்ளனர். இவர்கள் திருகோணமலை, வவுனியா, யாழ்பாணம் ஆகிய இடங்களில் இருந்து கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மேற்படி முகாம்களில் தங்கிருந்தார்கள். இவர்களில் இருவர் தமிழகத்தில் பிறந்து அங்கேயே கல்லுரிப் படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளாகும்.

தாயகம் திரும்பியர்களை வழியனுப்புவதற்கு விமானம் நிலையம் சென்றிருந்த உறவினர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கிடையே பிரிவுத்துயரை அவதானிக்க கூடியதாக இருந்தது. வழியனுப்ப வந்தவர்களுக்கு தாங்களும் தாய்நாட்டை சென்றடைய வேண்டும் என்ற ஏக்கமும் தாயகம் திருப்புவர்களிடையே தங்களது சொந்த இடத்துக்கு சென்று சொந்த பந்தங்களையும் பிறந்த இடத்தைப் பார்க்கப்போகின்றோம் என்ற சந்சோமும் காணப்பட்டது.
தாயகம் திரும்பியவர்களை ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக(ஒபர்) மதுரை மாவட்ட பணியாளர் சென்று பார்வையிட்டு அவர்களிடம் இலங்கைப் பிறப்புச் சான்று உள்ளனவா? முகாமில் பிறந்த இருவர் தாயகம் திருப்பியவர்களில் இருப்பதால் இலங்கை குடிருமைச் சான்று இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

(எமது தமிழநாட்டு நிருபர் அ.விஜயன்)