யாழ்.மண் சாதாரண மண்ணல்ல! இந்தியத் துணைத்தூதுவர்

யாழ் மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனைபூமி, இதுவொரு அறிவுடைய பூமி என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த இந்தப் பட்டிமன்ற நிகழ்வின் போது இந்தியாவில் இருந்து வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர்களான ராஜா, மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றியிருந்தனர். நிகழ்வில் இறுதியில் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.