கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது வலுவான கோரிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப் படுவார்கள் என கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம், இவர்களின் விடுதலை மேலும் இழுத்தடிக்கப் படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

(“கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வாக்குமூலத்தின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக, சட்டதரணி தெரிவித்துள்ளார்.

ஞானாசாரவுக்கு பிடிவிறாந்து

வழக்கில் ஆஜராமையை அடுத்து, பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசாரா தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சந்திரகாந்தனை இலகுவாக கைது செய்ய முடிகின்றது குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு. ஆனால் மஞ்சள் காவி அணிந்து பல காலமாக இனவாதம் பேசிவரும் ஞானசார தேரரை மட்டும் கண்டு பிடித்து கைது செய்ய முடியவில்லை என்பதிலேயே தெரிகின்றது இலங்கை அரசினதும் அதன் படைகளினதும் பாகுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டம்.

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் – வடகொரியா

வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக இடம்பெற்றதோடு, அமெரிக்காவுக்கெதிரான போர் தொடர்பான அந்நாட்டின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அந்நாட்டின் வரலாற்றில், மிகப்பெரிய இராணுவ மரியாதை இடம்பெற்ற சந்தர்ப்பமாக இது அமைந்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் ஆட்சியாளரான கிம் ஜொங் உன், ‘கட்சியினுடைய புரட்சிகரமான ஆயுதங்களின் காரணமாக, ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தொடுக்கப்படும் எந்தவொரு போருக்கும் நாம் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிததார். கடந்த காலங்களை விடத் தீர்க்கமானதாகக் காணப்பட்ட இந்த உரை, அமெரிக்கா மீது அந்நாடு காட்டிவரும் எதிர்ப்பு மனநிலையில் அடுத்த கட்ட அறிவிப்பாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த உரையின் போது, வடகொரியாவின் அணுஆயுதத் திட்டம் தொடர்பான எந்தவொரு நேரடியான கருத்தினையும் கிம் ஜொங் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஏமாற்றுகின்றது – கருணாநிதி

சர்வதேச அரங்கில் நாடகமாடி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இலங்கை ஏமாற்றி வருகிறது என்று குற்றஞ்சாட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்செல்லும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் மிரட்டி, தாக்கி, கைது செய்து கொண்டு போய் சிறையிலே அடைப்பதும், மீன்பிடிச் சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்துவதும், உடனடியாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எப்போதும் போல் கடிதம் எழுதுகிறாரோ இல்லையோ, பத்திரிகைகளில் அதைப் பெரிதாகச் செய்தி வெளியிடச் செய்துகொள்வதும் அதன் வாயிலாக மீனவர் பிரச்னை தீர்ந்து விட்டதாக வெறும் கற்பனை செய்துகொள்வதும் தான் வழக்கமாக நடைபெறுகிறதே தவிர் தமிழக முதலமைச்சரின் கடிதங்களை பற்றி இந்திய அரசும், இலங்கை அரசும் சிறிதேனும் கண்டுகொள்வதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை.

(“இலங்கை ஏமாற்றுகின்றது – கருணாநிதி” தொடர்ந்து வாசிக்க…)

மோடிக்கு ஜெயா மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும் 34 படகுகளையும் உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் 5ஆவது தடவையாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தென் தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏழை அப்பாவி மீனவர்கள் 5ஆவது முறையாக தொடர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(“மோடிக்கு ஜெயா மீண்டும் கடிதம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது

 

வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழர் ( NRTSL )அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இலங்கைக்கான அரசியல் அமைப்பின் உள்ளமைப்பு, அதனை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 9-10-15ம் திகதி லண்டனில் இடம்பெற்றது.  இச் சந்திப்பில் தேசத்தின் நலனில் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து ஆர்வமும், அபிப்பிராயங்களையும் வெளியிடும் பலர் கலந்துகொண்டனர். மிகவும் திறந்த அடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தற்போது இலங்கையில் நிலவும் அரசியற் பின்னணியானது அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழல் என்பதோடு அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான தருணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(“அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 3

(சஞ்சயன் மாதவன்)

வடக்கில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் எப்போதும் பகையாளி சண்டை நடக்கும். அதே நேரம் தனியார் பேரூந்து தமக்குள் சக்களத்தி சண்டை நடத்தும். எல்லாம் கலக்சன் பிரச்சனை. நெடுந்தூர பயணத்தில் இந்த நான் முந்தி நீ முந்தி ஓட்டப் போட்டி தினம் தினம் நடக்கும். காப்பற் வீதி போடப்பட்ட பின் பேரூந்துகள் ஓடுவதில்லை, பறக்கின்றன. நேர அட்டவணை சீர் செய்யப் படாததால் ஒரே நேரத்தில் புறப்படும் அரச, தனியார் பேரூந்துகள் போட்டி போட்டு அடுத்தவன் முந்தக் கூடாதென நடு வீதியில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவர். பஸ்ஸில் ஏற நாம் காலை முதல் படியில் வைத்தால் போதும், மதில் பாயும் காதலியை தாங்குவது போல் நடத்துனர் எம்மை இழுத்து அரவணைத்து உள்ளே தள்ளி விடுவார்.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 3” தொடர்ந்து வாசிக்க…)

சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!

 

1995ல் கைது செய்யப்பட்டு நாடு கடத்த முயற்சிக்கப்பட்ட கனடா உலகத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்துவதற்கான உத்தரவை கனடிய உச்சநீதிமன்றம் 2002ல் இடைநிறுத்தி அவருடைய வழக்கு மீள்விசாரணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இப்போது இப்போது புதிதாகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் அவரிற்கான நாடுகடத்தல் உத்தரவு 13 வருடங்கள் கழித்து மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களின் படி திரு.சுரேஸ் மாணிக்கவாசகம் தனக்கான இந்த உத்தரவு குறித்த தனது வாதப்பிரதிவாதங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லமுடியாது. எனவே அவரை கனடிய அரசு எந்த நேரமும் நாடுகடத்த முடியும்.
வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தனது தரப்பு வாதத்தை முன்வைக்க முடியாதபடியான இந்த உத்தரவு கனடிய அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார், உலகத்தமிழர் இயக்கத்தை வழிநடத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என நம்பப்படுகின்றன.
கனடிய ஆங்கிலப் பத்திரிகைத் தகவல்களின் படி, இந்த மாதம் 60 வயதையடையும் சுரேஸ் மாணிக்கவாசகம் மார்ச் 23, 1998ல் தான் வசிக்கும் பகுதியிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் அடிப்படையில் 40 ஆயிரம் பணப் பிணை மற்றும் 150 ஆயிரம் டொலர்கள் சொத்துப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

(“சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!” தொடர்ந்து வாசிக்க…)

ஆச்சி மனோரம்மா எம்மை விட்டு பிரிந்தார்

பழம்பெரும் நடிகை மனோரமா(78) உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா இன்று இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.