இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது. கனடா சமஉரிமை இயக்கம் கனடாவில் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வசந்தகாலத்தில் “யாவரும் கேளிர்” என்ற கலை நிகழவினை வெற்றிகரமாக நடாத்திய அமைப்பினர் தொடர்ச்சியாக உலகளாவிய முஸ்லிம் மக்கள் மேல் வலுத்துவரும் வெறுப்புணச்சியை எதிர்த்து பொதுகூட்டம் ஒன்றையும் நடாத்தியது.  இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பல சமூகசெயற்பாட்டாளரும் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் பல கேள்விகளை கேட்டு சமஉரிமை இயக்கத்தின் கொள்கைகளையும் புரிந்து கொண்டனர்.

(தொடர்ந்து வாசிக்க…)

சீறும் சீமான்

ராஜபக்ச கொன்றது ஒரு லட்சம் கருணா – ஜெயா கொன்றது இரண்டு லட்சமாம்… சீறும் சீமான்
பிரபாகரன் கொன்றொழித்த தமிழர் எண்ணிக்கையும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் என்பதை இந்த சீறும் சீமான் மறைப்பது ஏன்????????????

சு.கவை பலப்படுத்தியவன் நான்; ஒருபோதும் வெளியேறமாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ

சுதந்திரக்கட்சிலிருந்து தான் ஒருபோதும் வெளியேறப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதிய கட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின் விரும்பமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் நாட்டு மக்களை திசை திருப்புவதற்காக அரசியல் நோக்கில் கைதுகள் இடம்பெறவதாகவும் அவர் தெரிவித்தார். தலதா மாளிகையில் நேற்று காலை(28) வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார் .

(“சு.கவை பலப்படுத்தியவன் நான்; ஒருபோதும் வெளியேறமாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ” தொடர்ந்து வாசிக்க…)

அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!

குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 என்றால் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமானால் திருச்சி விராலி மலையில் ஆசிரமம் நடத்தி, அங்கு நடந்த கொலை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டில் கைதாகிய, செக்ஸ் சாமியார் என அறியப்பட்ட, பிரேமானந்தா அவர்களின் வழக்கு பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆரம்பத்தில் கிளிநொச்சி திருநகரில் ரவி சாமி என்ற பெயரில் சில சித்து விளையாட்டுகள் காட்டினார். மாணவபருவத்து நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை அங்கிருந்து இடம்பெயர செய்ததால், அவர் இன்று நிலத்தடி நீர் மாசுபட்ட சுன்னாகத்தை அன்றே மாசுபடுத்த அங்கு சென்று ஆசிரமம் அமைத்தார். அப்போது மல்லாகம் நீதிமன்றில் நீதிவானாக இருந்த சி வி விக்னேஸ்வரன் அவரின் பக்தரானார்.

(“அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளைகளை டக்ளஸ் தருவார் என கொப்பேகடுவ கூறினார்! அவர்கள் எங்கே?!

யாழ்.அல்லைப்பிட்டியில் கொப்பேகடுவ தலமையிலான படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 600 இளைஞர்களில் என்னுடைய 3 பிள்ளைகள், என் சகோதரியின் 3 பிள்ளைகள். அவர்களை டக்ளஸ் தேவானந்தா தருவார் என கொப்பேகடுவ கூறினார். அவர்கள் எங்கே? எங்களுடைய பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என தாயொருவர் வேண்டுகோள் விடுத்தார். மேற்கண்டவாறு திருமதி சூசைதாஸ் யேசுரட்ணம் என்ற தாய் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்துள்ளார்.

(“பிள்ளைகளை டக்ளஸ் தருவார் என கொப்பேகடுவ கூறினார்! அவர்கள் எங்கே?!” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு?

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், வட மாகாண விவசாய அமைச்சர் சீ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் முறைப்பாடு செய்ய உள்ளனர்.

(“வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு?” தொடர்ந்து வாசிக்க…)

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்வி!

சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதையொட்டி சமூகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

(“சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்வி!” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளை விடுதலை செய் – ஜே.வி.பி.வலியுறுத்து

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கையொன்றை முன்வைத்தது. வெவ்வேறான இனக்குழுமங்கள் பங்குபெறும் ஒவ்வொரு விழாவிலும், தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றைக் கொண்டுவருமாறும் அம்முன்னணி கோரியுள்ளது.

(“அரசியல் கைதிகளை விடுதலை செய் – ஜே.வி.பி.வலியுறுத்து” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)

இரத்தினத்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை எமக்கு மட்டுமல்ல அன்று போராடிக்கொண்டிருந்த எல்லோருக்கும்,அவரை அறிந்தவர்களுக்கும் ஏற்படுத்தியது.எமது எதிரிகள் கொடிகாம்ம் அய்யாவுக்கும் எதிரிகள்.அவரும் கொஞ்சம் நிலை குலைந்தார். இதுவரை கட்டுப்பாட்டோடு இருந்த எமது ஊர் இளைஞர்கள் பயப்படவில்லை.மிக ஆவேசம் கொண்டனர்.உறவுக்கார்ர்கள் அவரது ஈமக்கிரியைகள் சம்பந்தமாக செயற்பட அன்றிரவே குழுக்களாக எதிரிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தேடினர்.அவரகளின் திட்டம் அங்கே ஒரு பிணம் விழவேண்டும்.சந்தேகத்துக்கு உரிய தில்லைநாதன்,இராசரத்தினம்,சின்னக்குட்டி என பலர் வீடுகளில் இரவுத் தேடுதல் நடாத்தினர்.யாரும் அகப்படவில்லை.ஒரு மாதம் வரை தொடர்ந்தது.கொலையாளிகள் யாரும் வாய்திறக்கவில்லை.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் கொலை! கருணாவிற்கு 5 கோடி கொடுத்த கோத்தா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரவிராஜை கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லியனாராச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

(“ரவிராஜ் கொலை! கருணாவிற்கு 5 கோடி கொடுத்த கோத்தா?” தொடர்ந்து வாசிக்க…)