மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை!

உன்னதமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரால் அக்கருத்து நாட்டை நோக்கிச் சொல்லப்படவில்லை. அவரது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாந் தலைமுறைத் தலைவர்களை, இனி நாம் உருவாக்கவேண்டும் என்பதே அக்கருத்து. இது பிரதமரால் தனது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து எனினும்,
இன்றைய நிலைமையில் இக்கருத்து, அனைத்துக் கட்சிகளாலும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றேயாம். முக்கியமாக நம் தமிழர் தலைமைகள் இதுபற்றி ஆழச் சிந்திக்கவேண்டும்.

(“மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை!” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் கைதின் பின்னணியில் கூட்டமைப்பு!

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க,கருணா அம்மான் மற்றும் கே.பி ஆகியோரை கைது செய்வதாக கூறி மார் தட்டிக்கொண்ட அரசாங்கம் இன்று மௌனித்து இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(“பிள்ளையான் கைதின் பின்னணியில் கூட்டமைப்பு!” தொடர்ந்து வாசிக்க…)