வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனினும் இந்த அட்டவணைக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை ஒத்துழைப்பு வழங்காத நிலையில், அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தவிடயம் தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் குறித்த சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல், தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவந்து விட்டது வானவில் இதழ் 66

போருக்கு பின்னரான வடக்கின் குற்றச்செயல்கள

அண்மைக்காலமாக வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக்கள், கொலை, கொள்ளை, சிறுவர்கள் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இந்த குற்றச்செயல்கள் அனைத்துமே  யாழ் குடாநாட்டில் மாத்திரமன்றி, நாடு தழுவிய ரீதியில் நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனினும் யாழ் குடாநாடு தவிர்ந்த, நாட்டின் ஏனைய நிலப்பரப்பு மற்றும் அங்கு வாழும் மக்கள் தொகையினை, யாழ் குடாநாடு போன்ற மிகச் சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், யாழ் குடாநாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அதிகமென பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“வெளிவந்து விட்டது வானவில் இதழ் 66” தொடர்ந்து வாசிக்க…)

NRTSL organised a Landmark meeting in London

NRTSL(NEWSLETTER)                                                                                                   25 June 2016

 

Sri Lanka Deputy Foreign Minister Hon. Dr Harsh de Silva and Mrs Rosie Senanayake, Deputy Chief of Staff, Prime Minister’s Office met a wide gathering of Tamils at a meeting organised by the Non Resident Tamils of Sri Lanka (NRTSL)at Sangam Hall, Burnt Oak, Edgware, Middx., on the evening of 18 June 2016.

(“NRTSL organised a Landmark meeting in London” தொடர்ந்து வாசிக்க…)

பெண்களே“கண்கள்!“அழகுநோக்கியஅபாயம்?

(விஜிதாலோகநாதன், ஜெர்மனி)

இன்றையஉலகம் விளம்பரயுக்திகளுக்குள் கட்டுண்டுகிடக்கிறது. உணவுமுதல் வைத்தியம்,அழகுமுதல் ஆடைகள்,அநாவசியதேவைகள்-சேவைகள் எனஅனைத்திலுமேவிளம்பர இருட்டையேவெள்ளொளியாகக் கருதவைத்துவிட்டார்கள். சுவாசக்காற்றும் பைகளில் அடைத்துவிற்பனைக்குவந்தாற் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இலகுவாக இலவசமாகக் கிடைக்வுள்ளமனிதவளம் அனைத்தையும் வர்த்தக்குழுமங்கள் தம் லாபத்தேவைக்காகக் காவுகொண்டுவிட்டன. அதிலும் ஆண்களைவிடவிசேடமாகப் பெண்கள் விளம்பரவலைக்கண்களுக்குள் வேடன் வலையின்மான்களாகச் சிக்கிக்கொண்டனர்.அழகுஎன்பதுபெண்களுக்குஉணவை,நீரைவிடவும் முக்கியமாகப் பார்க்குமளவுக்குகற்பிதப்படுத்தியகலை-கலாச்சாரப் பாங்குகளும் இன்றையவிளம்பரவர்த்தகர்களுக்குபெரிதும் துணைநிற்கின்றன.

(“பெண்களே“கண்கள்!“அழகுநோக்கியஅபாயம்?” தொடர்ந்து வாசிக்க…)

நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி

நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.

(“நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி” தொடர்ந்து வாசிக்க…)

பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(“பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !” தொடர்ந்து வாசிக்க…)

ஒர்லாண்டோவின் மறுபக்கம்: வானவில்லில் கலந்த குருதி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எந்தச் செய்திக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. அது அனேகமாக மறுக்கப்பட்ட பக்கமாகவும் அமையும். தொழிநுட்ப வளர்ச்சியும் தகவல் வழங்குநர்களின் மிகையான பெருக்கமும் இணைந்ததால் விளைந்த தகவற் குவியல் யுகத்தில் வாழ்கிறோம். சரியான செய்தியைப் பெறுவது எவ்வாறென்பதே, நம் முன்னுள்ள பெரிய சவால். ஒரு விடயம் பற்றிப் பொதுவெளியில் பேசப்படுவன கட்டாயம் உண்மையாயிருக்கத் தேவையில்லை. ஆனால், அவை ஊடகவெளியின் உதவியால் உண்மையாகின்றன. இந்நிலையில் அவ்வாறான செய்திகளின் மறுபக்கத்தை எழுதுவது சவாலானது. ஒரு செய்தியின் மறுபக்கம் அதிர்ச்சி, வியப்பு, ஏமாற்றம் எனப் பலவித உணர்வுகளைத் தரலாம். மறுபக்கத்தின் வலிமை அதுவே.

(“ஒர்லாண்டோவின் மறுபக்கம்: வானவில்லில் கலந்த குருதி” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )

பற்குணம் தன் பதவி என்ற எல்லைக்கு அப்பால் சென்றும் அராஜகத்துடன் மோதியவர்.அன்றைய நாட்களில் பற்குணத்துடன் சமகாலத்தில். பல்கலைக் கழகத்தில் படித்த பொன்னையா,கணேசபிள்ளை,சின்னராசா ஆகியோர் வேலை கிடைக்காத காரணத்தால் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர்களாக பணிபுரிந்தனர்.பொன்னையா குச்சவெளி (இவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் உறவினர்)சின்னராசா தம்பலகாமம்- இவரின் சொந்த ஊரும் அதுவே.அடுத்தது கணேசபிள்ளை கந்தளாய்.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )” தொடர்ந்து வாசிக்க…)

மகாபொல இல்லையா.. பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மகாபொல புலமை பரிசில் இவ்வருடம் தமக்கு கிடைக்கவில்லையென கூறி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தமக்கு இந்த வருடம் மகாபொல புலமைபரிசில் கிடைக்காது என பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம், தெரிவித்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மகாபொல புலமைபரிசிலாக 5,000 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்றதையடுத்து, மாணவர்கள் கலைந்துசென்றனர்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 3)

ஏ.இ. குணசிங்கா தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போது இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் “இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும்? தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம் மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும்? இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா?” எனச் சட்டசபையில் வருத்தத்தோடு கேட்டார்.

(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 3)” தொடர்ந்து வாசிக்க…)