மரணித்தவர்கள் துயிலும் இடங்கள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்மானிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களைத் தோண்டியெடுத்தே வன்னியில் பல வீதிகளைப் புனரமைத்தது இலங்கை அரசு என்பதனை பலர் அறிந்திருப்பீர்கள்.அப்படி புல்டோசர்களால் தோண்டியெடுத்துக் கொண்டு வந்து போடப்பட்ட வீதிகளில் சில இடங்களில் நமது பிள்ளைகளது தலைமயிர் கூட தாரோடு ஒட்டி வீதியில் இருந்ததைப் பார்த்ததாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். மிகவும் துயரமான விடையம் இது.

(“மரணித்தவர்கள் துயிலும் இடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 79 )

பற்குணம் சுயவிருப்பத்தின் பெயரில் யாழ்ப்பாணம். இடமாற்றம் பெற்று பதவியை பொறுப்பேற்றார்.அவர் யாழ்ப்பாணம் வருவதை பல உயர்சாதியினர் விரும்பாதபோதிலும் சூழ்நிலை காரணமாக அவரின் வரவை நிறுத்த முடியவில்லை.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலிழந்த காலம்.ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டம் இருந்தது.

(“பற்குணம் A.F.C (பகுதி 79 )” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் பிடலுக்கு எம் இதய அஞ்சலி

அமெரிக்காவின் வாசலில் சாமானியர்களின் அதிகாரத்தை நிறுவிய மானிடத்தை வரலாறு விடுதலை செய்யும் என்றூ எதிர்வு கூறிய சுதந்திர விடியலை நேசிக்கும் உலக மக்களின் கனவு நாயகன் மாநிட நேயன் உலக ஜனநாயகவாதி ஏற்றத்தாழ்வற்ற நீதியான உலகை நிறூவ முடியும் என்றூ எம் காலத்தின் வாழும் உதாரணமான அந்த மாபெரும் சிந்தனயாளன் செயல் பாட்டாளன் நிரந்தரமாகா உறங்கி விட்டான். தோழர் பிடலுக்கு எம் இதய அஞ்சலி.

தமிழர் சமூக ஜனநாயக கட்சி (SDPT)

கண்ணீர் அஞ்சலி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கிளி நொச்சி மாவட்ட ஆரம்பகால உறுப்பினர் தோழர் ஜீவா நேற்று இரவு பாண்டிச்சேரி மருத்துவ மனையில் மாரடைப்பால் காலமானார். தோழரின் இறுதிச் சடங்கு நாளை திருவண்ணாமலை அடி அண்ணாமலை முகாமில் ( இலங்கை அகதிகள் முகாம்) நடைபெறவுள்ளது.மக்களின் விடுதலைக்காய் உழைத்த முதன்மைத்தோழர்களில் ஒருவரான இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்

(சாகரன்)

பொது உடமைத் தத்துவத்தை தனது நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக கொணடு செயற்பட்டவர். சர்வதேசம் எங்கும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியவர். மத்திய தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்பு இடதுசாரிப் போராட்டங்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர். தொடர்ந்த அங்கு கிடைத்த போராட்ட வெற்றிகளை ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற இன்று வரை அயராது உழைத்தவர். இடதுசாரிகளிடம் காணப்படும் நாடுகளின் இறமையை அங்கீகரித்து அந்தந்த நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சனைகளை அந்த நாட்டு மக்களே போராடி, பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இறுதிவரை தெளிவாக செயற்பட்டவர். எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு அற்ற உதவிகளை விடுதலை வேண்டிப் போராடிய நாடுகளுக்கு வழங்கியவர் இதனை நாம் தென் ஆபிரிக்காவின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவில் இருந்து மற்றய எதனையும் விட அதிகம் அறியலாம்.

(“பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்” தொடர்ந்து வாசிக்க…)

கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….

அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் தனது கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.

(“கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….” தொடர்ந்து வாசிக்க…)

போராட்டம் அராஜகம்-மாவீரர் நாள்

(விஜய பாஸ்கரன்)

இது புலிகளின் மாவீரர் வாரம். சிலர் புலிகளை போராளிகளாக தியாகிகளாக நினைக்கின்றனர். நாங்கள் அவர்களை ஒரு பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றோம். அவர்கள் நமது மண்ணில் நடாத்திய கொலைகள் மோசமானவை.போராட்டத்தின் பெயரால் நாட்டின் அனைத்து மக்களையும் அச்சுறுத்தியவர்கள். ஆயுதம் ஏந்திய சகல அமைப்புகளும் ஏதோ ஒரு வகையில் கொலைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அடிப்படையாக புலிகளே காரணமாக இருந்துள்ளனர். புலிகள் சக அமைப்பினர் அவர்களது ஆதரவாளர்கள் மீது வன்முறைகளை ஏவி விடவில்லை என்றால் சக அமைப்பினர்கள் நடாத்திய வன்முறைகள் கொலைகள் தானாகவே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

(“போராட்டம் அராஜகம்-மாவீரர் நாள்” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நாளில் கடந்த காலத்தை மீண்டும் நினைவில் கொள்வோம்!

2009ல் பதிவான கட்டுரை காலவெள்ளம் கடந்து சென்றும், நிதர்சனமாய் இன்றும் சொல்லும் ஒரே செய்தி, உசுப்பேத்தி உசுப்பேத்தி எம் இளம்தளிர்ளை இனியும் பலிக்கடா ஆக்காதீர்கள் என்பதே. இது கட்டுரையாளர் குறிப்பிடும் காசி ஆனந்தனுக்கு மட்டுமல்ல, அண்மையில் சென்னையில் நடந்த “மக்கள் சிவில் உரிமை கழக” நிகழ்வில் கலந்து, பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்களுக்கும் பொருந்தும். ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு அந்த பதிவை உங்கள் பார்வைக்கு மீண்டும் பதிவிட விரும்புகிறேன்.

(“மாவீரர் நாளில் கடந்த காலத்தை மீண்டும் நினைவில் கொள்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீரர் தினத்தை நினைவூட்டும் வகையிலான சுவரொட்டிகள், இன்று வெள்ளிக்கிழமை (25) ஒட்டப்பட்டுள்ளன.

(“யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கம் பதவி விலக வேண்டும்!

2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின்  ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப்  பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  இடையிலான சந்தர்ப்பவாத தேன் நிலவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய  தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே  ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து  வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர
நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே (மேலும்)