உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்

அரியலூர் (திருச்சி) அருகே தலித் பெண் நந்தினியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து படுகொலை செய்திருக்கிறார் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன். அத்துடன் நந்தினியின் பெண் உறுப்பை பிளேடால் அறுத்து 5 மாத சிசுவை வெளியே எடுத்து வீசிய கொடூரத்தையும் மணிகண்டன் செய்திருக்கிறார். அரியலூரை அடுத்த செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. தந்தையை இழந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினி சித்தாள் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

(“உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 99 )

யாழ் குடாநாடு வழமைக்குத் திரும்பியது.புலிகள் குடாநாட்டை விட்டு வன்னிக்கு தப்பி ஓடிவிட்டனர்.கிழக்கைச் சேர்ந்த பல புலிகள் எங்கும் போக முடியாமல் தடுமாறி ஒழித்து வாழ்ந்தனர்.இந்திய இராணுவ நடமாட்டம் அதிகரித்தது.பயப்படும்படியாக எதுவும் தெரியவில்லை.
அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கத் தொடங்கின.சில நாட்களின் பின் யாழ்ப்பாண நகர தளபதி ஒரு அதிகாரிகள் மகாநாடு ஒன்றை ஒழுங்குபடுத்தினார்.இதற்கு பற்குணம் சென்றவேளை யாழ் நகர மையப்பகுதியில் புலிகள் கைக்குண்டு ஒன்றை வீசி தப்பி ஓடிவிட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 99 )” தொடர்ந்து வாசிக்க…)

‘மஹிந்தவை நாடி நிற்கிறோம்’

“நிரந்தரத் தீர்வுக்கான பயணத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தொகுதி திறப்புவிழா, நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

(“‘மஹிந்தவை நாடி நிற்கிறோம்’” தொடர்ந்து வாசிக்க…)

2017 ஆம் ஆண்டின் சிறந்த மாகாண சபையாக மத்திய மாகாண சபை மலர வேண்டும்

இந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டின் தலை சிறந்த மாகாண சபையாக மத்திய மாகாண சபை மலர வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார் இம்மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். எம். உவைஸ். மத்திய மாகாண சபையின் இந்த ஆண்டின் கன்னி அமர்வு எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பம் ஆகின்றது. இந்நிலையிலேயே மேற்கண்டவாறு வாழ்த்தி உள்ள உவைஸ் இதற்காக இம்மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும் என்று பகிரங்கமாக கோரி உள்ளார். கடந்த காலத்தை திரும்பி பார்க்கின்றபோது மக்களுக்கு இன்னமும் நாம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது என்றும் தெரிவித்த இவர் இதனால் இந்த வருடத்தை மக்கள் சேவைக்கான வருடமாக இம்மாகாண சபை உறுப்பினர்கள் பிரகடனப்படுத்த வேண்டும் என்றார். இதுவே வாக்களித்த மக்களுக்கு செலுத்துகின்ற நன்றி கடன் ஆகும் என்றும் கூறினார்.

முல்லைத்தீவு- கோப்பாபுலவு மக்கள்

தங்கள் காணிகளை ராணுவமும் வனவள துறையினரும் அபகரித்ததை கண்டித்தும் அதை விடுவிக்கவும் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முற்பட்ட வேளையில் அந்த மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர் இராணுவத்தினர் .
பின்னர் மின்சாரத்தை துண்டித்தனர் . எனினும் மக்கள் நடு ரோட்டில் விறகுகள் கொண்டு தீ மூட்டி அந்த வெளிச்சத்தில் இருந்து போராடினார்கள். இதை கண்ட இராணுவம் கைதட்டி சிரிச்சுதாம். ஆனால் காலையில் அயல் கிராம மக்கள் அங்கே குவிய தொடங்கி உள்ளார்கள். இந்த மக்களின் கோரிக்கை வெற்றியடைய அங்கே பக்கத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் அங்கே அவர்களுக்காக அவர்களுடன் இணையுங்கள். எங்களுக்கான குரலை நாங்களே எழுப்புவோம்!

(“முல்லைத்தீவு- கோப்பாபுலவு மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

எங்களுக்கு போராடுபவர்கள் வேண்டாம். போராட்டம்தான் வேண்டும்!!

கனடாவில் குளிரென்றாலும் சம்பந்தன்தான் காரணம், லண்டனில பனியென்றாலும் சுமந்திரன்தான் காரணம் என்று தொட்டதற்கெல்லாம் தமிழ் கூட்டமைப்பின் மீது தவிலடித்துக்கொண்டிருக்கும் “புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் தீர்மானிகள்” எல்லோரும் தாயகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் பற்றி பேச்சு மூச்சுமில்லாமல் கரண்ட் அடித்த காகம் மாதிரி மூர்ச்சையாகி கிடப்பதுதான் அங்குள்ள மக்களுக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான அரசியல் தேவைகளின் வித்தியாசத்தை கோடு கிழித்து காட்டியிருக்கிறது.
வவுனியாவில் நடைபெற்ற காணமலாக்கப்பட்டவர்கள் குறித்த போராட்டமானது வென்றதோ தோற்றதோ அது வேறு விடயம். ஆனால், அரசியல் கலப்படமில்லாத போராட்டமொன்றை தாங்களே இனி கையில் எடுத்தால்தான் வழி பிறக்கும் என்ற முடிவோடு பாதிக்கப்பட்ட அந்த மக்கள் வீதியில் இறங்கியதானது ஆளும் தரப்பை மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டியில் நிறுத்தியது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்றும்கூட கோப்பாபுலவு மக்கள் அவ்வாறானதொரு விரக்தியோடுதான் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். (“எங்களுக்கு போராடுபவர்கள் வேண்டாம். போராட்டம்தான் வேண்டும்!!” தொடர்ந்து வாசிக்க…)