முதலமைச்சர் நஸீரின் பணத்துக்கு முழு தமிழ் கூட்டமைப்புமே விலை போனதா?

(ரி. தர்மேந்திரன்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் பணத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விலை போன நிலையிலேயே அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கி உள்ளனர், தமிழ் தேசிய கூட்டமைப்பு மொத்தமாக விலை போய் விட்டதா? என்கிற வலுவான சந்தேகமும் இருக்கவே செய்கின்றது, இருப்பினும் இக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அறிக்கை சற்று ஆறுதல் தருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் சட்டத்தரணி எம். எம். பஹீஜ் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

(“முதலமைச்சர் நஸீரின் பணத்துக்கு முழு தமிழ் கூட்டமைப்புமே விலை போனதா?” தொடர்ந்து வாசிக்க…)

‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’

(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதியின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பித்த புள்ளியென்பது, எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும், முக்கியமான முடிவுகளைக் கொண்டுவரக்கூடிய கலந்துரையாடலாக இது மாற வேண்டுமென்பதே, அநேகமானோரின் அவாவாக இருக்கிறது.

(“‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’” தொடர்ந்து வாசிக்க…)

மியான்மாரை ஆதரிக்கிறது சீனா

றோகிஞ்சா முஸ்லிம் ஆயுததாரிகள் மீது மேற்கொண்டு வருவதாக, மியான்மார் அரசாங்கம் தெரிவிக்கும் இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை, சீனா வெளியிட்டுள்ளது. ஓகஸ்ட் 25ஆம் திகதி, பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாகவே, 400,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ராக்கைனிலிருந்து பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அத்தோடு, பல நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

(“மியான்மாரை ஆதரிக்கிறது சீனா” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை

(கே. சஞ்சயன்)

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

(“மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

“கிழக்கு மாகாண நீடிப்பு காலத்தில் தமிழர் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”

“கிழக்கு மாகாணத்தின் ஆட்சி காலம் நீடிக்கப்பட்டால், நீடிக்கப்படும் காலத்துக்கு முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

(““கிழக்கு மாகாண நீடிப்பு காலத்தில் தமிழர் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”” தொடர்ந்து வாசிக்க…)

பஷீரின் மகத்தான சேவை என்றென்றும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவை!

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு இக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் மகத்தான சேவை என்றென்றைக்குமே தேவையாக உள்ளது என்று ஏறாவூர் நகர பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கட்சியின் ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்களில் ஒருவருமான எம். சி. ஏ. கபூர் தெரிவித்தார்.

(“பஷீரின் மகத்தான சேவை என்றென்றும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவை!” தொடர்ந்து வாசிக்க…)

மலையை விட பழுவான இழப்புக்களை சுமந்த அம்மா மனோன்மணி

தோழர் சிவா தோழர் காணேஸ் ஆகியோரின் தாயார் மனோன்மணி செல்லத்தம்பி மறைவு.

 

1940-04-13—–2017-09-10

தோழர் சிவலிங்கம் அர்ப்பணம் தியாகத்தின் உருவம்.
அம்மா மனோன்மணி செல்லத்தம்பியின் பெருமைக்குரிய மூத்த புதல்வர் சமூகவிடுதலையுடன் -தேசிய விடுதலை என்ற உன்னத கனவைக்கண்ட தாய்தந்தையருக்குரிய பொறுப்புணர்ச்சி வாய்ந்த நேர்த்தியான நேர்மையான உணர்வு கொண்ட தோழர்.
1980 களின் முற்பகுதியில் தமிழ் முஸ்லீம் தோழர்களுடன் கஞ்சிக்குடியாறில் பாசறையை முன் நின்று நடத்திய தோழர்.
சமணர் குகைபோன்ற பாறை மேடுகள் இயற்கை எழில் மிகு சூழ்நிலையில் சமையல் தொடக்கம் பாசறை அமைத்தல் பயிற்சி வழங்குதல் வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தவர்.

(“மலையை விட பழுவான இழப்புக்களை சுமந்த அம்மா மனோன்மணி” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு, அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி மற்றும் பொது நினைவு தினம் ஆகியவற்றை முடிவு செய்வது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்
(ஈ.பி.டி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

(“முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல்” தொடர்ந்து வாசிக்க…)

‘சிரியாவில் போர் வெல்லப்பட்டு விட்டது’

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் வெற்றிபெற்று விட்டதாக, லெபனானைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்டுவந்த ஆயுததாரிகளை, ஏறத்தாழ நாட்டை விட்டு, அரசாங்கப் படைகள் வெளியேற்றிவிட்டன என, ரஷ்யா தெரிவித்தது. சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின், இரண்டு முக்கியமான தோழமைப் பிரிவுகளால் வழங்கப்பட்ட இக்கருத்துகள், சிரியாவில், அரசாங்கப் படைகளால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுவரும் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

(“‘சிரியாவில் போர் வெல்லப்பட்டு விட்டது’” தொடர்ந்து வாசிக்க…)

‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண ​சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்து​கொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 ​பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

(“‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’” தொடர்ந்து வாசிக்க…)