வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு அம்பாறையில் அனைத்து சபைகளையும் கைப்பற்றும்!

(பஷீர் சேகு தாவூத்)
தீய முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான முஸ்லிம் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

(“வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு அம்பாறையில் அனைத்து சபைகளையும் கைப்பற்றும்!” தொடர்ந்து வாசிக்க…)

பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?

மீண்டும் ஒரு பத்தியாளர் பத்தவைத்த திரியில் நானும் என் பங்கிற்கு வெடிகொளுத்தும் பதிவு இது. ஒருகாலத்தில் ‘’பழம் பழுத்தால் வௌவால் வரும்’’ என்றவரும் ‘’புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே’’ என்றவரும் மேடைகளில் முழங்கிய வேளையில் கூடவே கொக்கரித்தவர்களில் மாவையும் ஒருவர். பாசறைகள் தயாராகிவிட்டன பயிற்சிகள் தொடங்கிவிட்டன என உணர்ச்சி ஊட்டியவர் இவர்.

(“பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆயுததாரிகளைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒத்துழையுங்கள்’

மியான்மாரின் குழப்பத்துக்கு மத்தியில் காணப்படும் வடமேற்குப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள், இராணுவத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மியான்மார் அரசாங்கம் கோரியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அரண்கள் மீது, ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ராக்கைனில் நிலைமை மோசமடைந்துள்ள நிலையிலேயே, மியான்மார் அரசாங்கத்தின் இக்கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

(“‘ஆயுததாரிகளைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒத்துழையுங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் மக்களோடு மக்களாய்

03/09/2017 இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை காரியாலயத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் பெண்களுடன் கலந்துரையாடலும் பதிவுகளும் நடைபெற்றன. அத்துடன் வந்தவர்கள் எல்லோருக்கும் மதிய உணவும் போக்குவரத்திற்கான செலவும் கொடுக்கப்பட்டன. தோழர சுகு தோழர் ஞானசக்தி போன்றவரi;களுடன் திருகோணமலையின் பல் வேறு பகுதிகளைச் சேர்ந்தவரகள் கலந்துகொண்டனர். ஒரு மாற்றத்திற்கான அறிகுறியாக இது காணப்படுவதாக மக்கள் பேசிக் கொண்டனர். திருகோணமலை கடற்கரை வீதியில் அமைந்த தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் காரியாலயத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது

“கேரள டயறீஸ்“

யாழ்ப்பாணத்தில் வெளியிப்படவுள்ள “கேரள டயறீஸ்“ புத்தகத்தைப்பற்றித் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். ஏறக்குறைய இது ஒரு வதந்தியே. மெய்யான அழைப்பிதழை பிழையாக உருமாற்றம் செய்து, தவறான விதத்தில் குழப்பமான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதற்குப் பின்னால் ஒரு சிறிய குழு செயற்படுகிறது. அந்தக் குழுவின் அரசியல் உள் நோக்கம் மிகக் கீழ்த்தரமானது. வதந்தி எப்போதும் தீமைகளையே விளைவிப்பதுண்டு. அது ஒரு தொற்றுநோய் என்பது சமூக வரலாற்று அனுபவம்.

(““கேரள டயறீஸ்“” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை இடம்பெற்ற பஸ் சேவையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆறாண்டுகளாக குறித்த பஸ் சேவை இடம்பெறாமையால் மக்கள் பல்வேறு அ​சௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

(“மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

சி.விக்கு எதிராக டெனிஸ் மனு

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

(“சி.விக்கு எதிராக டெனிஸ் மனு” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.

சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும். இலங்கை இந்தியாவின் வளர்ச்சியடைந்த தென் இந்திய மாநிலங்களுக்கு அருகாமையில் இருக்கிறது. இந்த வளர்ச்சியும் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியும் நெருங்கிய தொடர்பு பட்டவை என்பதே புவி பொருளாதார அரசியல் யதார்தமாகும். 1.5 மில்லியன் புலம் பெயர் மக்களுடனான சமூக பொருளாதார தொடர்புகள் அதிகமாகும். இங்கு உற்பத்தி சந்தை நடவடிக்கைகள் வேலைவாய்ப்புக்கள். கல்வியில் மறுமலர்ச்சி வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. (“வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வுக்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார் சங்கரி

“இனப்பிரச்சினை தீர்வுக்கு நீண்ட தாமதம் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை என்பதுதான் பிரதான காரணமாகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

(“தீர்வுக்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார் சங்கரி” தொடர்ந்து வாசிக்க…)

நீரில் மூழ்கித் தப்பிய யாழ்.மாணவி மரணம்

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பரப்பில், கடந்த 24ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் நீரில் மூழ்கிக் காப்பாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியொருவர் உயிரிழந்தார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவியான சகாயதாசன் டயானா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவர்,மண்பிட்டி நாவாந்துறையைச் சேர்ந்தவராவார் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்துக்கு சென்றபோதே இந்த விபத்து நடந்தது. ஒரு படகில் 6 பேர் பயணித்துள்ளனர். இதன்போதே, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று விசாரணைகளிலிருந்து தெரியவருந்துள்ளது.

(“நீரில் மூழ்கித் தப்பிய யாழ்.மாணவி மரணம்” தொடர்ந்து வாசிக்க…)