என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்

என்னை நல் மாணாக்கனாக்கிய ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தில் மீண்டும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். அருவரியில் ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரையும் மரத்தடி விளையாட்டுத்திடலில் ஆரம்பித்து மக்களின் விடுதலைக்காகான பொதுவாழ்வில் பயணத்தை மேற்கொள்வதற்கு எனக்கு பல்வேறு ஆசிரியர்களின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது. என்னைப் பெற்றெடுத்த என் தந்தையர் எனது இன்று வரையிலானான மாசீக குரு. அவர் தனது காலத்தில் கல்வி கற்றது வெறும் 3ம் வகுப்பு என்றாலும் இன்று சபையில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கான நேர்மை, நீதி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து இவர் வகுத்துக் கொடுத்த வாழ்கைப் பாதை தான் முதல் காரணமாக அமைகின்றது. இதனைத் தொடர்ந்து அவையத்து முன்னிருக்க எனது குஞ்சியப்பு மாமா போன்றவர்கள் பேருதவியாக செயற்பட்டனர். இதில் தான் ஈற்றெடுக்காவிட்டாலும் தனது இரத்தம் என்று எனக்கு வழிகாட்டியாக நின்ற அந்த குஞ்சப்புவையும் மாமாவையும் நான் அடிக்கடி நினைவில் நிறுத்துவதுண்டு.

(“என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் இதை எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.

(“வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன’

“பல்வேறு பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டன” எனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், காலியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, ஒல்லாந்தர்களால் பொறிக்கப்பட்டதல்ல எனவும் அது ஒரு சீன மாலுமியால் பொறிக்கப்பட்டதாகும் எனவும் தெரிவித்தார்.

(“‘தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன’” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய வேறொரு சிறந்த தலைமைக்குக் கீழ் புதிய கட்சியொன்று உருவாக்கப்பட்டு தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஊடகம்ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

(“புதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவைப் போல தமிழகமும் தலித்துகளை அர்ச்சர்கர்களாக நியமிக்க வேண்டும்: திருமாவளவன்

கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”1924-ம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே 1936-ல் கோயில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. வைக்கத்தில் கோயில் இருந்த வீதி வழியாக நடப்பதற்கே போராட்டம் நடத்தப்பட்ட கேரளாவில் இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கேரள இடதுசாரி அரசாங்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.

(“கேரளாவைப் போல தமிழகமும் தலித்துகளை அர்ச்சர்கர்களாக நியமிக்க வேண்டும்: திருமாவளவன்” தொடர்ந்து வாசிக்க…)

கட்டலோனியாவால் திங்கட்கிழமையன்று சுதந்திரப் பிரகடனம்

ஸ்பெய்னின் கட்டலோனியா பிராந்தியம், எதிர்வரும் திங்கட்கிழமை, தனது சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ளுமென, கட்டலோனியாவைச் சேர்ந்த பிரபல்ய ஒற்றுமை வேட்பு என்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மிரேஜா போயா அறிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்த வாரயிறுதியில் அல்லது அடுத்த வார ஆரம்பத்தில், சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்படும் என, அப்பிராந்தியத்தின் ஜனாதிபதி கார்லெஸ் புய்க்டெமொன்ட் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால், இதற்கான தெளிவான கால வரையறை வழங்கப்பட்டுள்ளது.

(“கட்டலோனியாவால் திங்கட்கிழமையன்று சுதந்திரப் பிரகடனம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைமைத்துவ நெருக்கடியை தீர்க்க இன்று விசேட பொது கூட்டம்!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட பொது கூட்டம் இத்தொழிற்சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் அம்பாறை நகர மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9. 30 மணிக்கு இடம்பெறுகிறது.

(“அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைமைத்துவ நெருக்கடியை தீர்க்க இன்று விசேட பொது கூட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைக்காக புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கை இணைக்கும் முயற்சிகள் இடம்பெறுமாயின் கிழக்கு மக்கள் அமைப்பு அதனை எதிர்த்து பெரும் போரட்டத்தினை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த வீரசேகர தெரிவித்தார்.

(“வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்!!” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்குப் போராட்டம் நியாயமானது’

காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கில் முன்னெடுத்துவரும் போராட்டமானது நியாயமானதே எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘வடக்குப் போராட்டம் நியாயமானது’” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடிக்கு கப்பல் சேவை

கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் இந்திய – இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கென புதிய கேள்வி மனுவை கோருவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட அங்கிகாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

(“தூத்துக்குடிக்கு கப்பல் சேவை” தொடர்ந்து வாசிக்க…)