தமிழகத்தில் இலங்கை அகதிகளும் நாடு திரும்புதலும். (பாகம் 1)

(தோழர் ஸ்ரனிஸ்)

இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் காரணமாக அங்கிருந்து அகதிகளாக 1983 தொடக்கம் 2009 வரை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து தமிழகத்தில் உள்ள 107 முகாம்களில் 62445 பேரும் வெளியில் 32231 பேரும் வாழ்ந்து வருகிறார்கள்.  தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நாகபட்டினம், நீலகிரி, திருவாதவூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் நீங்களாக மற்றய மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளது. இதில் செய்யாறு, திருச்சி கொட்டப்பட்டு(கொட்டப்பட்டு சிறைச்சாலையுடன்) விசேட முகாம்களும் உள்ளன.

(“தமிழகத்தில் இலங்கை அகதிகளும் நாடு திரும்புதலும். (பாகம் 1)” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கின் ஆட்சி ஆளுநரிடம்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் சனிக்கிழமை(30) நள்ளிரவு 12மணியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த பொகொல்லாகமவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைவதையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், பட்டாசுகளை கொளுத்தி தமது மகிழ்ச்சியை சிலர் தெரிவித்தனர். காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

(“கிழக்கின் ஆட்சி ஆளுநரிடம்” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன்

கிழக்கு மாகாண சபையில், முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன் என்று, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.   மட்டக்களப்பில் உள்ள அவருடைய காரியாலயத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

‘வாக்குமூலமளிப்பதற்கு கொழும்புக்கு வர முடியாது’

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, தன்னை விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

(“‘வாக்குமூலமளிப்பதற்கு கொழும்புக்கு வர முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா?

(கே. சஞ்சயன்)
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், உண்மையானது தானா என்ற சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. ஜனாதிபதியின் குழுவில், ஐ.நா செல்வதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் தனக்கு மாத்திரம், வீசா வழங்கப்படவில்லை என்றும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காணப்படாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

(“சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் மோதலில் டொனால்ட் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமான புவேர்ட்டோ றிக்கோவில், மரியா சூறாவளி காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ள போதிலும், அங்குள்ள அதிகாரிகளோடும் மக்களோடும், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசியல் ரீதியான மோதல்களில் ஈடுபட்டுள்ளார். இது, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், அவருக்கான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

(“அரசியல் மோதலில் டொனால்ட் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

‘மூலதனம்’ – 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. (“‘மூலதனம்’ – 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம்” தொடர்ந்து வாசிக்க…)

இன விரோதம் அற்ற அமைதி பூங்காவாக அம்பாறை மாவட்டம் மலர்தல் வேண்டும்!

– நாபீர் பவுண்டேசன் தலைவர் அபிலாசை –
எஸ். அஷ்ரப்கான்
இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் என்கிற உயரிய பூட்கையை முன்னிறுத்தி மக்கள் அரசியல் செய்ய கூடிய அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று நாபீர் பவுண்டேசனின் தலைவரும், அரசியல் விமர்சகருமான பொறியியலாளர் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்து உள்ளார்.
இவர் இது தொடர்பாக விடுத்து உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

(“இன விரோதம் அற்ற அமைதி பூங்காவாக அம்பாறை மாவட்டம் மலர்தல் வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் முதுசொம்– அதிபர் பிரின்ஸ் காசிநாதர்

1985 தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் அரங்கேறிய சித்திரை மாதத்தின் ஒரு பகற்பொழுதில் நான் இந்த மாமனிதரை எனது மதிப்புக்குரிய ஆசான் திரு. சண்முகநாதன் (கற்குடா) ஐயா அவர்களின் வீட்டில்தான் சந்திக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை இவருடனான நட்பும் நெருக்கமும் தொடர்கின்றன.

(“எங்கள் முதுசொம்– அதிபர் பிரின்ஸ் காசிநாதர்” தொடர்ந்து வாசிக்க…)