சொற்பனம் கண்டோம்…..?

பொன்சேகாவை ஆதரிக்கும் போது சுரேஷ் அவர்களும் சேர்ந்து முடிவு எடுத்தார்.

பின்பு கயேந்திரகுமார் பிரிந்த போது ஆசன பங்கிட்டு பிரச்சினை என்று சுரேஷ் அவர்கள் யாழ் பல்கலைக்கழகம் வந்து வகுப்பு எடுத்தார். அந்த நேரம் ஒற்றுமை பற்றி அதிகம் பேசினார்.

தேர்தலில் மக்கள் நிராகரித்த போது தேசிபட்டியலில் பங்கு கேட்டார். கிடைக்கவில்லை.

(“சொற்பனம் கண்டோம்…..?” தொடர்ந்து வாசிக்க…)

யாரால் ஒற்றுமை தகர்ந்தது?

தமிழர்களின் மனதில் சமஷ்ரியை உருவாக்கியவர் யார்? இன்று ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் யார்? எமக்கு வேண்டியது எது சமஷ்ரியா? ஒற்றையாட்சியா? அல்லது சிங்கள பெரும்பாண்மை கிள்ளித்தெளிப்பதை பெறுவதா?

(“யாரால் ஒற்றுமை தகர்ந்தது?” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனுக்கு நிகரானவர் சம்பந்தனே ! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா

கட்சிகளை உடைக்காது 2020 இற்குள் தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாட்டினை அவர் முன்னெடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சில கட்சிகள் வெளியேறி மாற்றுக்கட்சியினை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மாற்றுக்கட்சி உருவாகுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச்சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.

(“பிரபாகரனுக்கு நிகரானவர் சம்பந்தனே ! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா” தொடர்ந்து வாசிக்க…)

நீர்த்துப் போகும் போராட்டம்

(கே. சஞ்சயன்)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் மீண்டும் நீர்த்துப் போகத் தொடங்கியுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமாக இந்தப் போராட்டங்கள், காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருக்கின்றன.

(“நீர்த்துப் போகும் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

‘அதிகார பகிர்வு புலிக்கு அல்ல’

“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள். அல்லது தமிழர்களுக்கு மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கப்போவதாக நினைக்கின்றார்கள். அனைத்து மாகாணங்களுக்கும் சமமான வகையிலான அதிகாரங்களை வழங்குவதற்கே, நாம் யோசனைகளை முன்வைத்திருக்கிறோம்” என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, நேற்று (08) தெரிவித்தார்.

(“‘அதிகார பகிர்வு புலிக்கு அல்ல’” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

(“வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் வாள்வெட்டு: ஸ்தலத்துக்குச் செல்ல பொலிஸார் தாமதம்?

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில், நேற்று (12) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநகர், உத்தரிய மாதா ஆலயச் சந்தியிலுள்ள சலவைத் தொழிலகமொன்றுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் சென்றுள்ளார். இதன்போது, அந்தக் குடும்பஸ்தரைப் பின்தொடர்ந்துச் சென்ற சிலர், அவரை வாளால் வெட்டியுள்ளதுடன், சலவைத் தொழிலக உரிமையாளரையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

(“யாழில் வாள்வெட்டு: ஸ்தலத்துக்குச் செல்ல பொலிஸார் தாமதம்?” தொடர்ந்து வாசிக்க…)

வீட்டில் முறைகேடாக நடந்துகொண்ட யுவதியும் 7 மாணவர்களும் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு, தாண்டவன்வெளி பகுதியிலுள்ள வீடொன்றில் முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில், 27 வயது யுவதியொருவரும் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 7 பேரும், இன்று (13) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி, பாரதீ வீதி, இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள குறித்த வீட்டில், மாணவர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, மட்டக்களப்பு தலைமையப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவ்வீட்டைத் திடீரென முற்றுகையிட்டபோதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

(“வீட்டில் முறைகேடாக நடந்துகொண்ட யுவதியும் 7 மாணவர்களும் கைது” தொடர்ந்து வாசிக்க…)

இறுதிக் கோட்டையும் சிரிய அரசாங்கத்திடம்’

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவால் தலைமை தாங்கப்பட்ட, சிரிய இராணுவமும் அதன் தோழமை நாடுகளும், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதிக் கோட்டையையும், நேற்று முன்தினம் (08) கைப்பற்றியுள்ளன என, அக்கூட்டணியின் தளபதியொருவர் தெரிவித்தார். இதன்மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆட்சி, சிரியா முழுவதிலும் வீழ்த்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

(“இறுதிக் கோட்டையும் சிரிய அரசாங்கத்திடம்’” தொடர்ந்து வாசிக்க…)