யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருந்திவிட்டார்களா? அல்லது திருந்தினமாதிரி …… ?

1. திருப்பித் திருப்பி அதிகாரத்தொனியிலேயே அறிக்கைகள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எப்போது சமூகத்திற்கு முன் மாதிரியாக நடந்தார்கள் அவர்கள் கூப்பிட்டதும் கூட்டத்திற்கு வருவதற்கு. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பெண்களின் நிலை என்ன? பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் கேவலமான வன்முறையில் ஈடுபடுவது ஏன்? இதுவரை தமிழ் சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு வெள்ளையடிப்பதற்கு அரசியல் கைதிகள் பிரச்சினையை கையிலெடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது?

(“யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருந்திவிட்டார்களா? அல்லது திருந்தினமாதிரி …… ?” தொடர்ந்து வாசிக்க…)

திருத்தப்பட வேண்டிய தவறுகள்

(எஸ்.கருணாகரன்)

இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே.

(“திருத்தப்பட வேண்டிய தவறுகள்” தொடர்ந்து வாசிக்க…)

குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்

(கே. சஞ்சயன்)

புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன.

(“குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!

ஆட்சிக்கு வந்த முசோலினி ‘இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை அழித்துவிடுவேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தான். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தடைசெய்தான். பத்திரிகை சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினான். தன்னை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினான். தன் எதிரிகள் என்று அடையாளம் கண்ட அனைவரின் தலைகளையும் துண்டிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான்.

(“தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!” தொடர்ந்து வாசிக்க…)

சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி

(மொஹமட் பாதுஷா)

தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது. (“சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் அரசு ஆப்பு அடிக்க தயார் ஆகிறது, இனிவரும் காலங்களில் சுவிஸ் விசாவுக்கு தடை.

சுவிஸ் சட்டத்தரணியான திரு.ரஜீவ் லிங்கநாதன், தூண் மாநில அரசியல் பிரமுகரான திருமதி. தர்சிகா கிர்ஷானந்தன், தூண் மாநில பிரமுகரான திரு.சுப்பையா வடிவேலு, லுகானோ மாநில பிரமுகரான விசுவலிங்கம் ஈஸ்வரதாஸ் மீதும் சட்டம் பாயவுள்ளது, உதவி செய்ய போனவர்களும் இனிவரும் காலங்களில் உதவ முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது .

(“சுவிஸ் அரசு ஆப்பு அடிக்க தயார் ஆகிறது, இனிவரும் காலங்களில் சுவிஸ் விசாவுக்கு தடை.” தொடர்ந்து வாசிக்க…)