‘பதவியை விட்டு விலகினாலும் போராட்டத்தைக் கைவிடேன்’

பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டுக்காக ஆரம்பித்துள்ளப் போராட்டத்தை கைவிடமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான வேலையில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பகல் தங்காலையில் உள்ள மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் பிரதமர் பதவியை குறுகிய காலத்திற்கே வகித்திருந்தாலும் குறித்த குறுகிய காலத்துக்குள் பல நிவாரணங்களை வழங்கியதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் பதவியேற்றார்

ரணில் விக்கிரமசிங்க புதியப் பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்,ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாக பிரதமாகப் பதவியேற்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளமைத் தொடர்பாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவ​ர்தன தெரிவித்துள்ளார்.

(“எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு?” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்த தேர்தல் ( பாகம் – 2 )

சிறிலங்காவில் உள்ள பா .உ. க்கள் எத்தனை வகைப்படுவர். ( சுலோகம் – ஏகதேச காம்போதி )
(சஹாப்தீன் நானா )
குரூப் ஒன்று –
பரம்பரை பரம்பரையாக அப்பாட  அப்பா, அந்த அப்பாட அப்பாட அப்பப்பா,அம்மாவழி உறவுகள்,பழைய
பண்ணையாளர்கள், வெள்ளையனுக்கு வால்  பிடித்தவர்களின் வாரிசுகள் என ஒரு மென்மையான,
வெள்ளையும் சொள்ளயுமான அல்லது கருப்பும் ,கம்பீரமும் கலந்த முறுக்கு மீசை பா.உ க்கள்.

(“அடுத்த தேர்தல் ( பாகம் – 2 )” தொடர்ந்து வாசிக்க…)

’முறுகல் முடிந்தது: ஆட்சியில் கைக்கோர்ப்போம்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கொண்டுசெல்வோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். (“’முறுகல் முடிந்தது: ஆட்சியில் கைக்கோர்ப்போம்’” தொடர்ந்து வாசிக்க…)

’ஜனாதிபதிக்கு வழிவிட்டேன்’ – மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதியதோர் அரசாங்கத்தை உருவாக்கி, முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே, பிரதமர் பதவியிலிந்து இராஜினிமா செய்ததாக, ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விஜேராம மாவத்தையில் ​அமைந்துள்ள தனதில்லத்தில், இராஜினாமா கடிதத்தில் கைச்சாத்திட்ட பின்னரே, அவர் கண்டவாறு தெரிவித்திருந்தார். (“’ஜனாதிபதிக்கு வழிவிட்டேன்’ – மஹிந்த ராஜபக்ஷ” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அமைச்சரவையில் சு.க உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக, ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளனத் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கான பதவிகளை வழங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆறு பேரும், தனிக் கட்சியாக அன்றி, தனி நபர்களாவே, இந்த அரசாங்கத்தோடு இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. எனினும், புதிய அரசாங்கத்தோடு இணையவுள்ள 6 உறுப்பினர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த இராஜினாமா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, அப்பதவியில் இருந்து சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், அவர் இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் ராஜபக்ச இன்று பதவி விலகுகிறார்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகுகிறார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் தேதியையும் அறிவித்தார்.

(“இலங்கை பிரதமர் ராஜபக்ச இன்று பதவி விலகுகிறார்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு; மஹிந்தவின் கோரிக்கை நிராகரிப்பு

பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ நீடிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையுத்தரவை நீடித்து, உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்தது. பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழு, இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு மஹிந்த குழுவினர் விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்தனர். (“மஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு; மஹிந்தவின் கோரிக்கை நிராகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)