ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று (28.10.2010) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தோழர் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை

அன்பார்ந்த தமிழ் மக்களே!
இந்தநாட்டு மக்களை பொறுத்தவரையில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பது பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அவர் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்வரும் 16 ஆம் திகதி சட்டபூர்வமாக ஜனாதிபதியாகின்ற ஒரு சம்பிரதாயம் தான் இருக்கப்போகிறது.

இந்த வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் நிதானமாக புத்திபூர்வமாக பகுத்தறிவோடு சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த உசுப்பேற்றும் அரசியலை நடத்துபவர்கள் கடைசியில் இரத்தக்களரிகளுக்கே வழிவகுத்திருக்கிறார்கள். இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு போராட்டம் தேவைப்பட்டது என்பது உண்மை அந்தப்போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன் இந்த சபையிலும் பலர் இருக்கிறார்கள் அது ஒரு காலத்தின் தேவையாக இருந்தது இந்தநாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை என்பதனால் தான் கோரிக்கைகள் மேலும் மேலும் மேலும் மேலே போய் அதற்கான ஒரு போரும் போராட்டமும் நடக்கவேண்டி ஏற்பட்டது.
ஆனால், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தோடு வந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை நாங்கள் காப்பாற்றியிருந்தால் அதை பாதுகாத்திருந்தால் அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அதற்கு பிந்திய 25 வருடங்களில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பலிகொடுத்திருக்கிறோம். தெற்கிலும் மக்களும், பல ஆயிரக்கணக்கான படையினரும் பலியாகியிருக்கிறார்கள் 1990 முதல் 2009 வரை மரணத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்கள் கண்டதில்லை. 2009 இற்கு பின்பு இன்று வரை யுத்தம் நடைபெற்றிருந்தாலும் அரசியல் தீர்வோ, சமாதானமோ வந்திருக்குமா? வந்திருக்காது. இன்னும் இலட்சக்கணக்கான மக்களும், இளைஞர்களும் பலியாகியிருப்பார்கள் இழப்புக்களே மிஞ்சியிருக்கும்.
யுத்தம் முடிவடைந்து விட்டது. யுத்தம் பல துன்பியல் விளைவுகளை தந்து முடிந்திருக்கிறது. அவற்றைப்பற்றி நாங்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டேயிருக்க முடியாது. எதிர்காலம் நோக்கி நாங்கள் செல்ல வேண்டும். இந்த நாட்டில் தான் ஒரே நாட்டில் தான் ஐக்கியமாக சமாதானமாக சகோதரத்துவத்தோடு வாழ வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அதனை நாங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி நாங்கள் பாதுகாப்பை தேட முடியாது. போகக் கூடியவர்கள் போய்விடுவார்கள். இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களோடும், முஸ்லிம் மக்களோடும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும். ஆனால், சமாதானம் அற்றவர்களாக அல்ல. சமத்துவம் அற்றவர்களாக அல்ல. சம நீதி அற்றவர்களாக அல்ல சமத்துவமாகவும், சம நீதியோடும், பாதுகாப்போடும் சகோதரத்துவத்தோடும் வாழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
அவ்வாறான ஒரு நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தருவார்கள் என்று நினைக்கிறோம். அதற்காக முதற்கட்டமாக நாங்கள் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்.

காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணியும் 11 கோரிக்கைகளை முன்வைத்தது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 11 கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளதுடன், கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளது. வவுனியாவில் இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புறக்கணிப்பா, தீமை குறைந்த தீயதா?

(என்.கே. அஷோக்பரன்)
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வடக்கு-கிழக்கின் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, ஒரு காரியத்தைச் செய்துள்ளன. இந்தக் காரியத்தை, நடத்திவைத்தது, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்.

இடைத் தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும் மகிழ்ச்சி வைத்தியமும்

(எம். காசிநாதன்)
தமிழ்நாடு இடைத் தேர்தல் முடிவுகள், வழக்கமான இடைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், செய்திகள் நிறைந்தவை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் ஆளும் அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சி வைத்தியத்தையும் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள ‘விக்ரவாண்டி’ இடைத் தேர்தல், தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணியின் மறைவால் ஏற்பட்டது.

டயறிக் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் யூதர்கள்.

(AS Kantharajah)

நாவற்குழியின் பழைய பெயர், சாவாங்கோட்டை!
நாவற்குழிச் சந்தியிலுள்ள எனது மனைவியின் சீதணக் காணி உறுதியிலும் ‘தென்மராட்சிப் பகுதி நாவற்குழி கோவில்ப்பற்று, சாவாங்கோட்டை மணற்காடு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாவற்குழிக்கு ‘சாவாங்கோட்டை’ என்ற பெயர் எப்படி வந்தது? என நாற்குழியில் பிறந்த கவிஞர் அம்பியிடம் கேட்டேன்.

கோத்தாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி

கோத்தாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி

சர்வதேசமே கோத்தாவை கைது செய் என்ற கோசங்களுடன் கோத்தாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம்

தங்கேஸ்வரி மரணமானார்

தங்கேஸ்வரி அக்கா , இன்று காலமான செய்தி இப்போது அறிந்தேன்.

சமீபத்தில் மட்டக்களப்பிற்கு, பாரிசிலிருந்து சென்று வந்த அக்காவின் உறவினரான அலையப்போடி நல்லரத்தினம் அக்கா உடல் நலம் குன்றியிருப்பதாக சொன்னார்.

இலங்கையில் குறிப்பிடத்தக்க, தொல்லியல் ஆய்வாளாராக அவர் இருந்தார்.

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

(ஆசிரியர்: Medlife வலைப்பதிவாளர்)

நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.

UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும்

UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும் – மாற்றம் தேவை என்பதே SDPT யின் நிலைப்பாடு.

UNP – TNA கூட்டாட்சியில் கடந்த நாலரை வருடங்களாக வட – கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் :