மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், 27.01.2021 திகதியிட்டு, ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்’ என்ற தலைப்பிட்ட, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்கு உள்ளாகியதில், உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, அஞ்சலி செலுத்தும் அறிக்கையை வௌியிட்டிருந்தது.

மியான்மாரில் அவசர நிலை அமுல்

மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மார் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில் மீண்டும் இராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது.

முல்லைத்தீவில் பெரமுனவின் ஆண்டு விழா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகள் மாநாடும் முல்லைத்தீவு தொகுதிக்கான சம்மேளனக் கூட்டமும், முல்லைத்தீவு நகர பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றுள்ளது.

கிழக்கு முனையம் தொடர்பில் பிரதமரின் உறுதிமொழி

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார். கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். அலரிமாளிகையில் இன்று(01) முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

348 பேருக்குக் கொரோனா

பெலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த மேலும் 348 பேருக்குக் இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது.