பிரபல போதைப்பொருள் வியாபாரி யாழில் கைது

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸாரினால் பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

`சார்ஜர்களின்` பயன்பாடு குறித்து புதிய சட்டம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல வகையான சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்தும் வகையில்  புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஸ்மார்ட் தொலைபேசிகள்  மற்றும் டப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்குப்  பொதுவான சார்ஜர்களை (மின்னேற்றி)  பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியில் வாடுகின்றனர்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் எனவும்,  அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு: மஹிந்த அதிரடி அறிவிப்பு

நாட்டை முன்னேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் இருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளிநாட்டுப் பண வரவு அதிகரிப்பு

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 359.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இவ்வருடத்தின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையில் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் 2,574.1 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு 3.5%ஆல் உயர்வு

ஓகஸ்ட் மாதத்தில் 1,717 அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு செப்டம்பர் மாதத்துக்குள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் இது நாட்டில் கையிருப்பில் 3.5% உயர்வாகும் என்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தற்போது 1,682 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு சொத்துக்களும், 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தங்கச் சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சபையும் தமிழ், முஸ்லிம்களின் வகிபாகமும்

(மொஹமட் பாதுஷா)

இந்தியாவின் சினிமாத்துறை, அந்நாட்டின் அரசியலுக்கு பல நல்ல அரசியல்வாதிகளைக் கொடுத்துள்ளது. நமது நாட்டின் அரசியலானது, நல்ல நடிகர்களை உருவாக்கி இருக்கின்றது. ஆட்சியாளர்கள் உள்ளடங்கலாக, பெருந்தேசிய அரசியல்வாதிகள், சிறுபான்மை அரசியல்வாதிகள் என ஏகப்பட்டோர், இந்த நடிகர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். 

பகலுணவை திருடி உண்ணும் மாணவர்கள்

சக மாணவர்களின் பகலுணவை   திருடி உண்ணும் மாணவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பகலுணவை கொண்டுவரும் மாணவர்கள், பகலுணவை கொண்டுவருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

யாழில் கசிப்புடன் கைதான மாணவன்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை  ஊரிப் பகுதியில் 3 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை  உத்தரவிட்டார். குறித்த மாணவன்  3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தான்.   கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர்  யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

2023 ஆண்டுக்கான செலவு எகிறியது : கடனும் கூடியது

அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் செலவை விடவும் குறைவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செலவு 7,885 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியொதுக்கீட்டு பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.